இந்திய தண்டனைச் சட்டம் – 1860 பிரிவு 304
ஐபிசி பிரிவு 304 – கொலைக்குற்றம் ஆகாத மரணம் விளைவித்த குற்றத்திற்கான தண்டனை, கொலைக் குற்றம் ஆகாத, மரணம் விளைவிக்கும் குற்றத்தைப் புரிந்தவனுக்கு, அவன் அந்த குற்றத்தை, மரணத்தை உண்டாக வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தன்னுடைய செயலால் மரணம் சம்பவிக்கும் என்ற தெளிவுடன் அந்தக் குற்றத்தைப் புரிந்திருந்தால், ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரையில் சிறைக் காவலைத் தண்டனையாக விதிப்பதுடன் அபராதமும் விதிக்கப்படும். மரணம் உண்டாக வேண்டும் என்ற கருத்து இல்லாமல் அல்லது மரணத்தை விளைவிக்கத் தக்க உடல் காயத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தின்றி அவன் செய்த காரியத்தால் மரணம் விளைந்திருந்தால் அவனுக்கு 10 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.