எதற்கெடுத்தாலும் நீதிப்பேராணை வழக்குத் தொடுப்பது சரியா?
அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும் போது அதை எதிர்த்து நீதிப்பேராணை வழக்குகளை எவரொருவரும் உச்ச நீதி மன்றம் மற்றும் உயர் நீதி மன்றங்களில் தொடுக்கும் அதிகாரம் இந்திய அரசியல் சாசன கோட்பாடு 32 மற்றும் 226 ல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அதிகார உரிமையை எடுத்த எடுப்பிலேயே உச்ச நீதி மன்றத்தையோ உயர் நீதி மன்றத்தையோ அணுகுவது என்றால் பின் கீழமை நீதி மன்றங்கள் எதற்கு. நீதி பேராணை வழக்கு என்றால் உடனே விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலை மாறி கீழ் நீதிமன்றங்களில் தாக்கல் செய்ய வேண்டிய வழக்குகளையும் குப்பைக்கு கூட உதவாத வழக்குகளையும் நீதிபேராணை வழக்காக தாக்கல் செய்யப்பட்டதால் இன்று அவைகள் விசாரணைக்கு வரவே பல வருடங்கள் ஆகும் என்ற நிலை இருந்து வருகிறது.
தற்போதைய சூழலில் நீதிபேராணை வழக்கு உடனே எடுக்கப்படுகிறது என்றால் அது ஆட்கொணர்வு வழக்கு மட்டுந்தான்
வக்கீல்கள் தங்களின் வருமானத்தை பெருக்கி கொள்ளத்தான் உயர் நீதி மன்றத்தையும் உச்ச நீதி மன்றத்தையும் நாடுகிறார்கள் உண்மையில் ஒரு பைசா கூட செலவில்லாமல் கீழ் நீதி மன்றத்திலேயே நீதிபேராணைக்கு நிகரான வழக்குகளை தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம் உயர் நீதி மன்றத்தில் அல்லது உச்ச நீதி மன்றத்தில் தொடுக்கும் ஆட்கொணர்வு மனுக்களை உங்கள் ஊர் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்திலேயே தொடுக்க முடியும்.ஆம் குற்ற விசாரணை முறை விதிகள் 1973 ன் விதி 97 ன் கீழ் முறைக்கேடாக கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களை கண்டுபிடிப்பதற்கான உத்தரவை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவரே பிறப்பிக்க முடியும் அதே போல் கடத்தி செல்லப்பட்ட பெண்களை மீட்க விதி 98 ன் கீழ் மனு செய்ய இயலும்
ஆனால் இவைகளை தங்களின் வருமானம் கருதி எந்த வக்கீலும் செய்வதில்லை நீதிபதிகளும் கண்டுகொள்ளுவதில்லை