உங்க அப்பாவுக்கு அடிபட்டுருச்சு!’ - வேலூரில் உறவினருடன் நம்பிச் சென்ற மாணவிக்கு நடந்த கொடுமை6-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட இளைஞரைக் கிராம மக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியை அடுத்த கீழ்பட்டி சாந்தி நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் 11 வயது மகள் அங்குள்ள நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்துவருகிறார். கடந்த 12-ம் தேதி காலை வழக்கம்போல் அந்தப் மாணவி பள்ளிக்குச் சென்றார்.மாலை 3.30 மணியளவில் மாணவியின் குடும்ப உறவினரான கீழ்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் (30) என்ற இளைஞர் திடீரென பள்ளிக்கு வந்தார். தலைமை ஆசிரியரிடம் சென்று மாணவியின் தந்தைக்கு அடிபட்டுவிட்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார்.இதை நம்பிய தலைமை ஆசிரியர் சாமுவேல், வகுப்பறையில் இருந்த மாணவியை அந்த இளைஞருடன் பைக்கில் அனுப்பிவைத்தார். அதன்பிறகு, மாணவியின் குடும்பத்துக்கு ஆறுதல் கூற தந்தையின் செல்போன் எண்ணுக்குத் தலைமை ஆசிரியர் போன் செய்தார்.மாணவியின் தந்தைதான் போனை எடுத்து பேசினார். அவரிடம்,
உடம்பு எப்படி இருக்குங்க; உங்களுக்கு அடிபட்டதாக சொன்னாங்க’ என்றார். `நான் நல்லாத்தான் இருக்கிறேன்; எனக்கு எதுவும் ஆகவில்லையே; என்னாச்சு மேடம்’ என்றார் மாணவியின் தந்தை.அதன் பிறகே, மாணவி கடத்தப்பட்ட விவகாரம் தலைமை ஆசிரியருக்குத் தெரியவந்தது. மாணவியை தேடிச் சென்றபோது, அதே கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் மாணவியை மிரட்டி வினோத்குமார் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதைப் பார்த்து ஊர் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.ஆத்திரத்தில், வினோத்குமாரை அடித்து உதைத்தனர். காயமடைந்த அவர் சிகிச்சைக்காக குடியாத்தம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வினோத்குமார் மீது குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸார், ‘போக்ஸோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்