குடும்ப பிரச்சனை காரணமாக குதிரைப்படை காவலர் தூக்கிட்டு இறந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது…
மேற்படி இறந்த நபர் சென்னை பெருநகர ஆயுதப்படையில் உள்ள குதிரைப்படையில் அருண்குமார் என்ற காவலராக பணிபுரிந்து வருகின்றார்.
இவர் விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அய்யனார் மில் காலனி ஊரை சேர்ந்தவர்.
இவர் கடந்த 2022 ஆம் வருடம் காவலராக பணியில் சேர்ந்துள்ளார், இவர்க்கு கடந்த மார்ச் மாதம் பிரியா என்பவருடன் காதல் திருமணம் முடிந்துள்ளது.
இவரது மனைவி பிரியா (2018 – Batch) திருநெல்வேலி ஆயுதப் படையில் பெண் காவலராக பணிபுரிந்து வருகின்றார்,
மேற்படி இறந்த நபருக்கு அப்பா அம்மா மற்றும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர்,
மேற்படி இறந்த நபரின் மனைவி பிரியா இறந்தவரின் அப்பா அம்மாவை பார்க்க கூடாது எனவும் கவனிக்க கூடாது என்று
சண்டை போட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் காவலர் அருண்குமார் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
எப்போதும் போலவே காவலர் காலையில் குதிரைப்படை அலுவலுக்கு சென்று விட்டு இன்று 10.7.2023 அனுமதி பெற்று வந்துள்ளார்.
அவர் உடன் தங்கியிருக்கும் புஷ்பராஜ் என்பவர் 11.30 மணிக்கு தங்கியிருக்கும் அறையில் வந்து பார்த்த போது மின் விசிறியில் கயிற்றால் தூக்கிட்டு இறந்த நிலையில் அருண்குமார் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பின்பு காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் அளித்ததன் பேரில் அயனாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி கே எம் சி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மேற்படி விசாரணை நடைபெற்று வருகிறது.
செய்தியாளர்.
S.ரெங்கசாமி