முதல்-அமைச்சர் பிரிவு மனுக்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்; கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத் திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.
மேலும், மாற்றுத்திற னாளிகள் மற்றும் அதிக வயது முதிர்ந்தோர் களுக்காக அமைக்கப் பட்டுள்ள சிறப்பு அமரு மிடத்திற்குச் சென்று, மாவட்ட கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இம்மனுக்களை மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி னார்கள்.
இக்கூட்டத்தில், காரியா பட்டி வட்டம், வெற்றிலை முருகன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பொ.மாயகிருஷ்ணன் என்பவரின் வாரிசு தாரர்களான அழகம்மாள், ராமமூர்த்தி மற்றும் கற்பகவள்ளி ஆகியோர்க ளுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.6 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை கலெக்டர் அனிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக்கழுவன் உட்பட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.