Police Recruitment

கம்பம் பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்களுக்கு ரூ.42 ஆயிரம் அபராதம்

கம்பம் பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்களுக்கு ரூ.42 ஆயிரம் அபராதம்

தேனிமாவட்டம் கம்பம் கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயிகள், ஏலத்தோட்ட தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் அண்டை மாநிலமான கேரளாவுக்கு செல்கின்றனர்.

மேலும் அங்கிருந்து வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் தமிழக பகுதிக்கு வருகின்றனர். இப்பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்கள் இயக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து உத்தமபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் சுந்தரராமன் தலைமையில் அதிகாரிகள் கம்பம்-கம்பம் மெட்டு புறவழிச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுனர் உரிமம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாத 12 வாகனங்களுக்கு ரூ.42 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் சாலை விதிகளை பின்பற்றி விபத்தை தவிர்க்க வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தினர்.

உரிய ஆவணங்கள் இன்றி பயணம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.