சாமனுர் கிராமத்தில் நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய 7 பேர் மீது வழக்குப் பதிவு. இருவர் கைது மற்றவர்கள் தலைமறைவு .
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த சாமனுர் கிராமத்தை சேர்ந்த விவசாயி முனிராஜ் (வயது.42), இவருக்கும் அதே ஊரை சேர்ந்த வெங்கடேசன் (வயது .48), வடிவேல்(வயது .47), அருள் பிரகாஷ்(வயது .42), பரந்தாமன்(வயது .46), கோவிந்தராஜ்(வயது .48), அசோகன்(வயது .47), கிருஷ்ணமூர்த்தி
(வயது .48), ஆகியோருக்கும் நிலம் சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது,
மேலும் நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் 7 பேரும் முனிராஜ் என்பவரின் அனுபவத்தில் உள்ள நிலத்தில் இறந்தவரின் உடலை புதைக்க குழி தோண்டி கொண்டிருந்தனர்.
இதனை கண்ட முனிராஜ் இவர்களை கண்டித்து குழி தோண்டுவதை தடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்தவர்கள் முனிராஜை கடுமையாக தாக்கி உள்ளனர்.
இதனால் பலத்த காயமடைந்த முனிராஜ் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்ப்படு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து முனிராஜ் இன்று அளித்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து வடிவேல், கோவிந்தராஜ் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தலைமறைவான மற்ற 5 பேரையும் தேடி வருகின்றனர்.