Police Recruitment

பாலக்கோடு தீத்தார அள்ளி கிராமத்தில் விவசாய நிலத்தில் காட்டு பன்றியை வேட்டையாடிய தந்தை மகன் கைது

பாலக்கோடு தீத்தார அள்ளி கிராமத்தில் விவசாய நிலத்தில் காட்டு பன்றியை வேட்டையாடிய தந்தை மகன் கைது

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தீத்தாரஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி கௌரன் (58). இவரது மகன் ராம்குமார் (வயது.32) ஆகிய இருவரும் தங்களது விவசாய நிலத்தில் உள்ள விளை பயிர்களை காட்டு விலங்குகளிலிருந்து காப்பாற்ற விவசாயம் தோட்டம் முழுவதும் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மின்சாரத்தை பயன்படுத்தி வயல்வெளி முழுவதும் மின்கம்பி மூலம் விவசாய நிலத்தில் மின்சாரம் பாய்ச்சி வந்தனர்.
வழக்கமாக வரும் காட்டுப்பன்றி ஒன்று நேற்று இரவு எதிர்பாராத விதமாக கெளரனின் விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தது.
இதையடுத்து தந்தை மற்றும் மகன் இருவரும் இணைந்து இறந்த காட்டு பன்றியை சமைக்க முடிவு செய்த நிலையில் பாலக்கோடு வனத்துறைக்கு பொதுமக்கள் ரகசிய தகவல் அளித்ததன் பேரில்
சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்ற பாலக்கோடு வனத்துறையினர், கெளரன் மற்றும் ராம்குமார் இருவரையும் பிடித்து விசாரித்ததில் இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.
அவர்களிடமிருந்த காட்டுபன்றி இறைச்சி, மின் ஒயர் ,கம்பி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து,
தந்தை மகன் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.