Police Recruitment

மதுரை மத்திய சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் விற்பனை நிலையம்

மதுரை மத்திய சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் விற்பனை நிலையம்

மதுரை மத்திய சிறையில் உள்ள தண்டனை சிறை வாசிகளின் தண்டனை காலம் முடிந்த பின் அவர்களது வாழ்வாதா ரத்திற்காக பல்வேறு வகையான தொழில் பயிற்சிகள் சிறைக்குள் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன் மற்றும் தமிழக சிறைத் துறையுடன் இணைந்து பெட்ரோல் டீசல் விற்பனை நிலை யத்தை பிரீடம் பில்லிங் ஸ்டேஷன் என்ற பெயரில் தொடங்கி சிறைவாசிகளுக்கு வேலை வாயப்பை அளித்து வருகிறது.

முதற்கட்டமாக இத்திட்டத்தில் புழல் , வேலூர் பாளையங் கோட்டை, புதுக்கோட்டை, கோவை ஆகிய 5 இடங்களில் தொடங்கப் பட்டு செயல்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக 2-ம் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள ஆறு முக்கிய இடங்களில் புதிய பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தொடங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. அதில் மதுரை புதுஜெயில் ரோடு பகுதியில் புதிய பெட்ரோல் பல்க் கட்டுமானப்பணிகள் நடைபெற்றன. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. சிறப்பு விருந்தினராக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்று கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் விற்பனை நிலையத்தை தொடங்கி வைத்தார்.

விழாவில் சிறைத்துறை டி.ஜி.பி. அம்ரேஷ் பூஜாரி, மதுரை சரக சிறைத்துறை துணை தலைவர் பழனி, மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) பரசுராமன், இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பெட்ரோல் நிலையங்களில் பணிபுரியும் சிறைவாசிகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் மதுரை மத்திய சிறையில் உள்ள தகுதியான 41 தண்டனை சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படை யில் தேர்வு செய்து அவர்களுக்கு களப்பயிற்சியும் பெட்ரோல் நிலையத்தில் பணி புரிவது குறித்தான பயிற்சியை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வழங்கியது.

Leave a Reply

Your email address will not be published.