விருதுநகர் மாவட்ட காவல்துறை சார்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது
விருதுநகர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படியும் , திருச்சுழி காவல் துணை கண்காணிப்பாளர் ஆலோசனைப்படியும் ஏ முக்குளம் அரசு மேல்நிலைப் நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு போதைப் பொருள் தடுத்தல் ,சைபர் கிரைம் குற்றம் சம்பந்தமாகவும் ,குற்றங்களில் இருந்து எவ்வாறு விடுபட வேண்டும் என்பது பற்றியும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
முக்குளம் அரசு மேல் நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு பற்றியும் மாணவர்களுக்கு பாலியல் குற்றம் குறித்தும் குற்றங்களில் இருந்து எவ்வாறு விடுபட வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை உதவி ஆசிரியர் தலைமை தாங்கினார். இதில்அ. முக்குளம் சார்பு ஆய்வாளர் அசோக்குமார், கலந்து கொண்டு பள்ளி மாணவர்கள் போதைப் பொருளை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். சிறிய சிறிய தவறு செய்யும் போது படிப்பு வீணாகிவிடும். மாணவர்கள் செய்யும் தவறுகளுக்கு காவல்துறையால் வழக்குபதிவு செய்யும் சூழ்நிலை ஏற்பட்டால் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும். இதனால் அரசு வேலை கிடைப்பதிலும் பாதிப்பு ஏற்படும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும் வெளிநாடுகளுக்கு சென்று தங்களின் குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரமுடியும். செல்போன் பார்ப்பதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். செல்போன் மாணவர்களை சீரழிக்கும் வேலையை செய்து வருகிறது.என்றும் பேருந்தில் படிகளில் தொங்கியபடி பயணம் செய்வதன் ஆபத்து குறித்தும் , போக்குவரத்து விதிமுறைகளையும் தலைக்கவசத்தின் அவசியத்தையும், பெற்றோர்களை குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளையும், போக்சோ சட்டம் யார் மீது பாயும், குழந்தை திருமணம் செய்து வைத்தால் யாருக்கு என்ன தண்டனைகள்,1098 செயல்பாடுகள், சமூக ஊடகங்கள் பயன்பாட்டு முறை, போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும்
பள்ளிக்கு சரியான நேரத்துக்கு வருதல் ஜாதி அடையாளங்களான பனியன்கள் கை பட்டைகள் தவிர்க்கவும் மேலும் சைபர் கிரைம் குற்றம் சம்பந்தமாக குற்றங்கள் பற்றியும் அவரை தடுக்கும் பொருட்டு 19 30 இலவச தொலைபேசி எண்கள் பற்றியும் அவர் அறிவுரை கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு காவல்துறையின் சார்பில் மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டது.
பள்ளி உதவி தலைமை ஆசிரியர், அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.