அரசு பள்ளி ஆசிரியை-அதிகாரி வீடுகளில் 40 பவுன் நகை, பணம் கொள்ளை
மதுரை மாவட்டம் திருமங்கலம் மாயோன் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது35). இவரது மனைவி விஜயலட்சுமி. இவர் சுப்புலாபுரம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
உடல்நலக்குறைவு காரணமாக விஜயலட்சுமி மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டனர்.
இதனால் கடந்த 10 நாட்களாக வீடு பூட்டி கிடந்தது. இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை திறந்து அதிலிருந்த 8 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்யைடித்து சென்றனர்.
இதே பகுதியில் ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் குடியிருந்து வருகிறார். நேற்று கரிசல்காலாம் பட்டியில் நடந்த கோவில் கும்பாபிஷேகத்திற்கு சென்று விட்டார். அவரது வீட்டிலும் மர்ம நபர்கள் புகுந்து பணம், நகையை கொள்ளையடித்து சென்றனர்.
மாயோன் நகரை சேர்ந்தவர் சுந்தர். டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயமணி. கப்பலூர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று ஜெய மணி தனது குடும்பத்தி னருடன் வீட்டின் மாடி அறையில் தூங்க சென்று விட்டனர். நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்தனர். பீரோவில் இருந்த 35 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளை யடித்து சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் தடயங்கள் சேகரிக்கப் பட்டது.
மாயோன் நகரில் ஒரே கும்பல் அடுத்தடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், மின்வாரிய அதிகாரி உள்ளிட்ட 3 வீடுகளில் கைவரிசை காட்டிய சம்பவம் அதிர்ச்சி யை ஏற்படுத்தி உள்ளது.