கடை ஊழியரிடம் 101 பவுன் நகை கொள்ளை
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை ஜவஹர் பஜார் தாதன்ஜி தெருவை சேர்ந்தவர் ஜித்தேந்திர குமார் ரமேஷ் ஜெயின் (வயது36). இவர் மும்பையில் உள்ள பிரபல நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.கடையில் தயாரிக்கும் நகைகளை தமிழகத்தில் கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வியாபாரிகளிடம் ஜித்தேந்திர குமார் விற்பனை செய்து வருவது வழக்கம்.
அதன்படி கடந்த சில நாட்களாக முன்பு மும்பை யில் இருந்து மதுரைக்கு வந்த அவர் பெரியார் பஸ் நிலைய பகுதியில் உள்ள பிரபல லாட்ஜில் தங்கியிருந்தார். தான் கொண்டு வந்திருந்த மொத்த நகைகளையும் 43 பவுன் நகைகளை எடுத்து கொண்டு மீதம் 101பவுன் நகைகளை லாட்ஜ் அறையில் வைத்து விட்டு சென்றார்.
நகையை வியாபாரி களிடம் விற்றுவிட்டு லாட்ஜ்க்கு வந்த ஜித்தேந்திர குமாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது அறையில் வைத்திருந்த 101 பவுன் நகை திருடு போயிருந்தது.
இதுகுறித்து லாட்ஜ் நிர்வாகத்திடம் கேட்டு உரிய பதில் இல்லை. இதையடுத்து ஜித்தேந்திர குமார் திடீர் நகர் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அறையை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் லாட்ஜ் ஊழியர்கள், தங்கியிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் லாட்ஜ்க்கு வந்து சென்ற நபர்கள் குறித்தும், நகையை திருடியது யார்? என்பது தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சி.சி.டி.வி. காமிரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. லாட்ஜில் நகை வியாபாரி யிடம் 101 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.