Police Department News

பொதுமக்களை அச்சுறுத்தும் மாடுகள்

பொதுமக்களை அச்சுறுத்தும் மாடுகள்

மதுரை
தமிழகத்தில் நகர் பகுதியில் வளர்க்கப்படும் மாடுகளால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே நகரில் மாடுகளை வளர்க்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடு களை விதித்து வருகிறது. ஆனால் மதுரை மாநகராட்சியில் அதிகாரிகளின் மெத்தனத்தால் மாடுகள் சாலையில் சர்வ சாதரணமாக சுற்றி திரிகின்றன.
மேலும் மாடுகளால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றன. சில இடங்களில் சாலைகளின் நடுவே மாடுகள் அமர்ந்து கொண்டு போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்கின்றன.
மதுரையில் பெரியார் பஸ் நிலையம், திருப்பரங்குன்றம் ரோடு, தெற்கு மாரட்வீதி, மாசி வீதிகளில் மாடுகளால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படு கிறது. குறிப்பாக தெற்கு கிருஷ்ணன்கோவில் தெரு, தெற்கு மாசி வீதி 24 மணி நேரமும் மாடுகள் முகாமிட்டு சாலையை ஆக்கிரமிக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்வோர்கள் கடும் அவதியடைகின்றனர்.

சில நேரங்களில் மாடுகள் ஆக்ரோசமாக மோதி கொள்வதால் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சமடை கின்றனர். மாட்டின் உரிமையாளர்கள் தொழுவத்தில் அடைக்காமல் பால் கறந்துவிட்டு வெளியில் விட்டு விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மையில் சென்னையில் மாடு முட்டியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார். இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக சென்னையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையா ளர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்பட்டது. மதுரை மாநகராட்சியிலும் கமிஷனர் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.