Police Department News

குற்றாலத்தில் சுற்றிய 12 அடி நீள வெள்ளை ராஜ பாம்பு.. அலறியடித்து ஓடிய மக்கள்..!.

குற்றாலத்தில் சுற்றிய 12 அடி நீள வெள்ளை ராஜ பாம்பு.. அலறியடித்து ஓடிய மக்கள்..!.

தென்காசி மாவட்டம், குற்றாலம் குற்றாலநாதர் கோவிலானது மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலமாகும். இது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. மேலும், குற்றாலநாதர் திருக்கோவில் குற்றாலம் மெயின் அருவியின் மிக அருகாமையில் உள்ளது.
இந்தகோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில்,விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குற்றால அருவியில் குளித்துவிட்டு குற்றாலநாதரை வழிபட்ட வண்ணம் இருந்தனர்.
இந்த நிலையில், குற்றாலநாதர் கோயில் அலுவலக வளாகத்தில் மிகப்பெரிய பாம்பு ஒன்று புகுந்துள்ளதாக பக்தர்கள் சிலர் பார்த்து கோயில் ஊழியர்களிடம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கோயில் ஊழியர்கள் குற்றாலம் வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
விரைந்து வந்த குற்றாலம் வனத்துறையினர் மற்றும் தென்காசி தீயணைப்புத் துறையினர் அரை மணிநேரத்துக்கு மேலாக போராடி சுமார் 12 அடி நீளமுள்ள அரிய வகை கொடிய விஷம் கொண்ட வெள்ளை இன ராஜநாகத்தை பிடித்தனர்.
மேலும், பிடிபட்ட பாம்பை வனத்துறையினர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள அடர்வனப் பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.தினம் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் குற்றாலநாதர் கோயில் வளாகத்தில் 12 அடி நீளமுள்ள அரியவகை ராஜநாகம் பிடிபட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.