என்ட்ரி பாஸ் வாங்கினார், சடலமாக மீட்கப்பட்டார்!’- வகுப்பறையில் விபரீத முடிவெடுத்த சென்னை ஆசிரியைசென்னை அரும்பாக்கத்தில் பிரபலமான தனியார் கல்லூரி வகுப்பறையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆசிரியை சாந்தி மீட்கப்பட்டுள்ளார்.
திருத்தணியை அடுத்த கர்லபாக்கத்தைச் சேர்ந்தவர் சாந்தி (32). இவரின் அப்பா இறந்துவிட்டார். அம்மா சத்துணவு பணியாளராகப் பணியாற்றிவருகிறார். படிப்பை முடித்த சாந்தி, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தெலுங்கு பேராசிரியையாக சில ஆண்டுகளாக பணியாற்றிவந்தார். இந்தநிலையில் அவருக்கு 2012-ம் ஆண்டு சென்னை பெரம்பூரில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியை பணி கிடைத்தது. அங்கு பணியாற்றி வந்த சாந்தி, நேற்று மதியம் அரும்பாக்கம் தனியார் கல்லூரிக்கு வந்தார்.கல்லூரியில் அவர் பாடம் எடுத்த வகுப்பறைக்குச் சென்றவர், அங்குள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கும் தகவல் தெரிந்ததும் கல்லூரி நிர்வாகமும் மாணவிகளும் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் உடனடியாக இதுகுறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்துக்கு போலீஸார் சென்று சாந்தியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர். சம்பவ இடத்துக்கு காவல்துறை உயரதிகாரிகள் சென்று ஆய்வு நடத்தினர். மேலும், கல்லூரி நிர்வாகத்திடம் எத்தனை மணிக்கு சாந்தி உள்ளே வந்தார், அவர் யாருடனும் பேசினரா போன்ற தகவல்களை விசாரித்தனர்.இந்த நிலையில், வகுப்பறைக்குள் ஆசிரியை சாந்தி தற்கொலை செய்த தகவல் காட்டுத்தீ போல கல்லூரி வளாகத்தில் பரவியது. அதனால் மாணவிகளும் பேராசிரியைகளும், கல்லூரி ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர். முன்னாள் பேராசிரியை ஒருவர், வகுப்பறையில் தூக்கில் தொங்கியது தொடர்பான பேச்சு கல்லூரி வளாகத்தில் விவாதமானது.இந்தச் சமயத்தில் சாந்தி தற்கொலை செய்த வகுப்பறைக்குள் போலீஸார் சோதனை நடத்தினர். அவரின் ஹேண்ட் பேக், அவர் கொண்டுவந்த தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்தத் தற்கொலை சம்பவம் குறித்து அண்ணாநகர் துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவின்பேரில் அரும்பாக்கம் இன்ஸ்பெக்டர் சங்கர் விசாரணை நடத்திவருகிறார்.விசாரணை குறித்து போலீஸார் கூறுகையில், “சம்பந்தப்பட்ட கல்லூரியில் ஆசிரியை சாந்தி, பேராசிரியையாகப் பணியாற்றினார். இதனால் பணியிலிருந்து விலகியபிறகும் அந்தக் கல்லூரிக்கு அடிக்கடி அவர் சென்றுவந்துள்ளார். இதனால்தான் அவர் கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மதியம் நுழைவு வாயிலில் என்ட்ரி பாஸ் வாங்கிவிட்டு உள்ளே சென்றார், மறுநாள் பிணமாக மீட்கப்பட்டார்.மேலும், அவர் பாடம் எடுத்த தெலுங்கு துறையின் வகுப்பு அறைகளின் கதவுகள் பூட்டாமல் திறந்திருக்கும். இந்தத் தகவல் சாந்திக்குத் தெரியும் என்பதால் சேலை அணிந்துகொண்டு கையில் ஹேண்ட் பேக், தண்ணீர் பாட்டிலுடன் அந்த வகுப்பறைக்குள் அவர் சென்றுள்ளார். தண்ணீர் பாட்டில் வகுப்பறையில் உள்ள மேஜையில் வைக்கப்பட்டுள்ளது.தூக்குபோட்டு தற்கொலை செய்ய துப்பட்டாவையும் அவர் கையில் எடுத்துச் சென்றுள்ளார். அதைக் கொண்டு மின்விசிறியில் தூக்குப் போட்டுள்ளார். அவரின் கையில் காயம் இருக்கிறது.அது எப்படி ஏற்பட்டது என்று விசாரித்துவருகிறோம். மேலும் சாந்தியின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்துவருகிறோம். அதன்அடிப்படையில் ஒருவரிடம் விசாரணை நடந்துவருகிறது. விரைவில் சாந்தியின் தற்கொலைக்கான காரணம் தெரியவரும்” என்றனர்.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்