உலகமனநல தினத்தை முன்னிட்டு ஆரோக்கிய கருத்தரங்கு கூட்டம்
(10.10.2023)நேற்று உலக மனநல தினத்தை (World Mental Health Day) முன்னிட்டு மனநலம் மற்றும் நல்வாழ்வு விழிப்புணர்வு கருத்தரங்கம் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) திரு.T.மங்களேஸ்வரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகர காவல்துறை மற்றும் “Top Kids” இணைந்து நடத்திய இக்கருத்தரங்கில் “Top Kids” மனநல ஆலோசகர் Dr. D.போஜராஜ், Ph.D, மனநலம் மற்றும் நல்வாழ்வு குறித்து உரை நிகழ்த்தினார். இதில் காவல் அதிகாரிகள், ஆளினர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.