Police Recruitment

குழந்தைக் கடத்தல் விவகாரத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று பேர் கைது; இருவர் தப்பியோட்டம்! – கோவைக் குழந்தைக் கடத்தல் வழக்கு நிலவரம்கோவைக் குழந்தைக் கடத்தல் விவகாரத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மதுக்கரையைச் சேர்ந்த ஜாகிர் உசேன் தனக்குத் தெரிந்தவர்களுக்குக் குழந்தை வேண்டும் என்று இடைத்தரகர் ஹாசினியை அணுகி உள்ளார். குழந்தை விற்பனை இடைத்தரகர்களான ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியைச் சேர்ந்த ஹசீனா, கல்யாணி மற்றும் ஜாகிர் உசேன் ஆகிய மூன்று பேரும்,பிறந்து 40 நாள்களான ஆண் குழந்தையை கடந்த 17-ம் தேதி மதுரையைச் சேர்ந்த கண்ணன் மற்றும் ஜோதி தம்பதியரிடமிருந்து ரூ.2,50,000 விலைக்கு வாங்குவதற்கு கருமத்தம்பட்டிக்கு வந்துள்ளனர்.அப்போது, குழந்தை வாங்குவதில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஹசீனாவுக்கும், ஜாகீர் உசேனுக்குமிடையே பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, தனது காரில் இடைத்தரகர்கள், குழந்தையுடன் வந்த தம்பதியர் ஆகியோரை ஏற்றிக்கொண்டு ஜாகிர் உசேன் சூலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.பாப்பம்பட்டி பிரிவு அருகே, மீண்டும் தகராறு முற்றியது. இதையடுத்து, கல்யாணி சத்தம் போட்டு காரிலிருந்து குதித்து ஓடியுள்ளார்.இதனால், அருகில் இருந்த மக்கள் சந்தேகமடைந்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கிருந்த போக்குவரத்துக் காவலர்கள் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில் சந்தேகத்திற்கிடமான மூவரையும் கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்தச் சம்பவம் அறிந்து,மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு சமூகப் பணியாளர் புவனேஸ்வரி மற்றும் சாந்தாமணி ஆகியோர் விசாரித்ததில், குழந்தையைச் சட்டத்திற்கு விரோதமாக வாங்கியதும், அதற்கு புரோக்கராக இருந்து விற்பனை செய்ததும் உறுதியானது.இதைத்தொடர்ந்து, ஹசீனா, கல்யாணி, ஜாகிர் உசேன் ஆகிய மூவரை கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதில், ஜாகிர் உசேன் மதுக்கரை பகுதி தி.மு.க ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கத்தில் துணைச் செயலாளராக இருந்துள்ளார்.ஹசீனா ஏற்கெனவே நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் கடத்தல் வழக்கில் பிணையில் வெளிவந்தவர்.கண்ணன் மற்றும் ஜோதி கைது செய்யப்படவில்லை என்றாலும், அவர்கள் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் இருவரும் போலீஸ் கட்டுப்பாட்டிலிருந்து நேற்று மாலை தப்பிவிட்டனர். இதனிடையே, விசாரணைக்காக போலீஸ் அழைத்தபோது, குழந்தையுடன் மதுரையில் இருந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.ஆனால், மேற்கொண்டு தொடர்பு கொண்டபோது அவர்களது போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுவிட்டது. இதையடுத்து, குழந்தையுடன் அவர்களை மீட்பதற்காக போலீஸார் மதுரைக்கு விரைந்துள்ளனர்.’காலைக்குள் அவர்களைப் பிடித்து கோவைக்கு கொண்டுவந்துவிடுவோம். அதன் பிறகுதான் கண்ணனும், ஜோதியும் உண்மையிலேயே அந்தக் குழந்தையின் பெற்றோர் தானா?அல்லது அவர்களும் குழந்தைக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களா? என்பது தெரியவரும்” என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Leave a Reply

Your email address will not be published.