வழிப்பறியில் ஈடுபட ஆயுதங்களுடன் பதுங்கிய 11 பேர் கைது
மதுரை
திருப்பரங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராணி மற்றும் போலீசார் சம்பவத்தன்று ரோந்து சென்றனர். அப்போது வெயில் உகந்த அம்மன் கோவில் பின்புறம் பதுங்கியிருந்த ஒரு கும்பல் போலீசாரை கண்டதும் தப்ப முயன்றது.
உடனே போலீசார் விரட்டி சென்று 6 பேரை பிடித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனையிட்ட போது கத்தி, அரிவாள், மிளகாய்பொடி உள்ளிட்டவை வைத்திருந்தது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த முருகன் மகன் திவாகரன், பரத் என்ற மாரிமுத்து, விஜய் (28), அருப்புக் கோட்டையைச் சேர்ந்த சோலைசாமி (19), பந்தல்குடி நிறைகுளத்தான் மகன் சக்தி முகேஷ் (21), கார்த்திக் ராஜா (25) என தெரிய வந்தது.
6 பேரையும் போலீசார் கைது செய்தனர். தனியாக செல்லும் நபர்களை மிரட்டி இந்த கும்பல் பணம் பறிக்க முயன்றது விசாரணையில் தெரியவந்தது.
அதேபோல் விளாச்சேரி சுடுகாட்டு பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கி யிருந்த சிவபிரியன், மதன், கார்த்திக், பாலாஜி, பாண்டீஸ்வரன் ஆகிய 5 பேரை திருநகர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வமாணிக்கம் தலைமை யிலான போலீசார் கைது செய்தனர்.