Police Recruitment

தீபாவளி பண்டிகையையொட்டி போக்குவரத்து மாற்றம்

தீபாவளி பண்டிகையையொட்டி போக்குவரத்து மாற்றம்

மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகின்ற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பொது மக்கள் நகருக்குள் எளிதாக வந்து செல்லும் வகையில் சரக்கு வாகனங்களுக்கு போக்குவரத்து தற்காலிகமாக மாற்றம் செய்யப்படுகிறது.
நேற்று (2-ந்தேதி) முதல் இலகுரக (டாடா ஏஸ் போன்ற) சரக்கு வாகனங்கள் மதியம் 12.30 மணி முதல் 3.30 மணி வரை மற்றும் இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை ஆகிய நேரங்களில் மட்டுமே கீழ மாரட் வீதி, மாசி வீதிகள், ஆவணி மூல வீதிகள் ஆகிய சாலைகளில் சரக்குகளை ஏற்றி இறக்க அனுமதிக்கப் படும்.

9-ந் தேதி அன்று பகல் நேரத்தில் மதுரை நகருக்குள் மஹால் ரோடு, கீழமாரட் வீதி, மாசி வீதிகள், ஆவணி மூல வீதிகளில் இலகுரக சரக்கு வாகனங்கள் உட்பட எந்த ஒரு சரக்கு வாகனங்களுக்கும் அனுமதி கிடையாது.
மேலும் பை-பாஸ் சாலை, காமராஜர் சாலை, அண்ணாநகர் 80 அடிரோடு, கே.கே. நகர் 80 அடிரோடு, அழகர்கோவில் சாலை, மூன்றுமாவடி சந்திப்பு, புது நத்தம் ரோடு, அய்யர்பங்களா சந்திப்பு, திண்டுக்கல் ரோடு, கூடல் நகர் சந்திப்பு, அவனியாபுரம் பெரியார் சிலை சந்திப்பு, சிவகங்கை சாலை-ரிங்ரோடு சந்திப்பு, மீனாட்சி மருந்துவமணை சந்திப்பு ஆகிய சந்திப்புகளில் இருந்து நகருக்குள் நுழைய லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் (பயணிகள் வாகனங்கள் தவிர்த்து) வந்து செல்ல அனுமதி இல்லை. அன்று இரவு 11 மணி முதல் மறுநாள் 10-ந்தேதி. காலை 7.10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப் படும்.

10, 11-ந் தேதிகளில் பகல் மற்றும் இரவு நேரம் முழுவதும் மதுரை நகருக்குள் மேற்படி சாலைகளில் லாரிகள், கனரக வாகனங்கள், இலகு ரக சரக்கு வாகனங்கள் வந்து செல்ல அனுமதி இல்லை.
அதே நாட்களில் பொது மக்களின் நலன் கருதி நேதாஜி ரோடு, மாசி வீதிகள், ஆவணி மூல வீதிகளில் இருசக்கர வாகனங்கள் தவிர மற்ற வாகனங்க ளுக்கு அனுமதி இல்லை. அவசியமெனில் இரு சக்கர வாகன போக்குவரத்தும் தடை செய்யப்படும்.
அதே நாட்களில் பேலஸ் ரோடு, கீடிமாரட் வீதிகள் வழியாக வாகனங்கள் செல்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படும். எந்த வாகனங்களையும் வீதியில் பார்க்கிங் செய்ய அனுமதி இல்லை
மதுரை மாநகர பொதுமக்கள், வியாபாரிகள், வணிகர்கள், வர்த்தக சங்கங்கள் நெரிசல் இல்லாமல் மக்கள் பொருட்கள் வாங்கி செல்ல உதவும் வகையில் தற்காலிக போக்குவரத்து மாற்றத்துக்கு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்ளப்படு கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.