தேர்தலில் போட்டியிட விரும்பும் ஐ.பி.எஸ் அதிகாரிகள்
ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக பணியாற்றி விட்டு விருப்ப ஓய்வு பெற்றோ அல்லது ஓய்வுக்கு பிறகோ அரசியல் கட்சிகளில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழக தீயணைப்பு துறை இயக்குனராக இருந்தவர் பி.கே.ரவி பீகாரை சேர்ந்த இவர் சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றார். இவரது தந்தை காங்கிரசில் 3 முறை எம்.பி.,யாக இருந்தவர். இதனால் குடும்ப அரசியலை பின் பற்றி இவரும் காங்கிரசில் சேர்ந்தார் தந்தையின் செல்வாக்கை வைத்து அங்கே லோக்சபா தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
அதே போல் தேனி பகுதியை சேர்ந்த ஐ.பி.எஸ்.,அதிகாரி வி.காமராஜா ஹரியானா மாநிலத்தில் ஏ.டி.ஜி.பி.,யாக இருந்து ஓய்வு பெற்றவர் தற்போது அம்மாநிலத்தில் சிர்ஸா லோக்சபா தொகுதியில் பா.ஜ.,சார்பில் போட்டியிட உள்ளார். இதற்கான வேலைகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
போலீஸ் அதிகாரி ஒருவர் இது சம்பந்தமாக கூறுகையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலர் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி., எம்.எல்.ஏ.,க்களாக இருக்கின்றனர். ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் இதற்கு விதி விலக்கல்ல ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நட்ராஜ் அ.தி.மு.க., விலும் மவுரியா மக்கள் நீதி மய்யத்திலும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். கர்நாடகா ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருந்த அண்ணாமலை தற்போது தமிழ்நாடு பா.ஜா. தலைவராக உள்ளார்
பணி ஓய்விற்கு பிறகும் தங்களுக்கான செல்வாக்கையும் பவரையும் தக்க வைத்து கொள்ள அரசியலில் ஈடுபடுகின்றனர். இதில் சிலர் மட்டுமே வெற்றி பெருகின்றனர் இவ்வாறு கூறினார்.