Police Recruitment

மின் மயானம் அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

மின் மயானம் அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியம் ஆ.கொக்குளம் ஊராட்சிக்கு உட்பட்டது தேன்கல்பட்டி கிராமம். இப்பகுதி மக்களுக்கு சொந்தமான மயானம் செக்கானூரணி திருமங்கலம் மெயின் ரோட்டில் உள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் இறந்தவர்ளை அவர்கள் வழக்கப்படி சாஸ்திர சம்பிரதாயங்கள் முறைப்படி அடக்கம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிதாக மின் மயானம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு மின் மயானம் அமைந்தால் பாரம்பரிய பழக்க வழக்கங் கள் மறையும் நிலை ஏற்படும். மேலும் பல்வேறு பகுதி மக்கள் மின்மயானத்தை பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் மாசுபடும் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று புகார் எழுந்தது. இது குறித்து கடந்த மாதம் கலெக்டர் சங்கீதாவிடம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.

இந்த நிலையில் செக்கானூரணி பகுதியில் மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தேவர் சிலை அருகில் கிராம பொதுமக்கள் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.