Police Recruitment

நெல்லையில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.1.25 லட்சம் திருட்டு- சில மணி நேரத்தில் திருடனை மடக்கி பிடித்த போலீசார்

நெல்லையில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.1.25 லட்சம் திருட்டு- சில மணி நேரத்தில் திருடனை மடக்கி பிடித்த போலீசார்

நெல்லை தச்சநல்லூரை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் நெல்லை சந்திப்பு கெட்வெல் மொத்த பூ மார்க்கெட்டில் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடையில் காசாளராக டவுன் மாதா கோவில் தெருவை சேர்ந்த அருணாசலம் என்பர் வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் மதியம் வரையிலான விற்பனையை முடித்துக்கொண்டு அந்த பணத்தை தச்சநல்லூரில் வசிக்கும் உரிமையாளரான பெரியசாமி வீட்டில் கொண்டு ஒப்படைப்பது வழக்கம்.
அதன்படி நேற்று மதியம் பூ விற்ற தொகையான ரூ.1 1/4 லட்சத்தை எடுத்துக்கொண்டு அவர் தச்சநல்லூருக்கு புறப்பட்டார். அந்த பணத்தை மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்டியில் வைத்திருந்தார். பின்னர் தச்சநல்லூர் செல்லும் வழியில் ஒரு கோவிலின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு டீக்கடைக்குள் சென்று டீ குடித்தார். பின்னர் வெளியே வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருட்டு போயிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அருணாச்சலம், தச்சநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் பொருத்த ப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தபோது, ஏற்கனவே திருட்டு வழக்கில் கைதாகி வெளியே வந்த தச்சநல்லூர் துர்க்கையம்மன்கோவில் தெருவில் வசிக்கும் முருகன்(வயது 45) என்பவர் பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. மேலும் பூக்கடையில் இருந்து அவரை நோட்டமிட்டு முருகன் பின்தொடர்ந்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் தேடி பார்த்த நிலையில், தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அவர் பதுங்கியிருந்தார். அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர். சில மணி நேரங்களில் திருடனை மடக்கி பிடித்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.