சென்னையில், மழை நீர் புகுந்த குடிசையில் சிக்கிய பெயிண்டரையும், அவர் வளர்த்த பூனையையும் மீட்ட காவல் ஆய்வாளர்
சென்னை, கீழ்பாக்கத்தில் புயல் மழையின் போது, இடிந்து விழும் நிலையில் இருந்த குடிசை வீட்டினுள் இருந்த இளைஞரையும் அவர் வளர்த்த பூனையையும் காப்பாற்றிய காவல் ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
புயல் கரையை கடந்த நாளில், நள்ளிரவு நேரத்தில் கீழ்பாக்கம் சாமிநாதபுரத்தில் காவல் ஆய்வாளராக இருக்கும் திருமதி. ராஜேஸ்வரி அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மழை நீர் புகுந்த நிலையில் இடியும் நிலையில் இருந்த குடிசை வீடு ஒன்றில் பெயிண்டராக பணி புரியும் கனேஷ் என்பவரை காவல் ஆய்வாளர் திருமதி. ராஜேஸ்வரி அவர்கள் காப்பாற்றியுள்ளார். அந்த நபர் மது போதையில் இருந்த போதிலும் அவரின் கோரிக்கையின்படிஅவர் வளர்த்த பூனைக்குட்டியை மீட்ட காவல் ஆய்வாளர் சக காவலர்களின் உதவியுடன் அந்த நபரையும் மீட்டார். இந்த சம்பவம் நடைபெற்ற சில நிமிடங்களில் குடிசை வீடும் இடிந்து விழுந்தது.
உரிய நேரத்தில் பெயிண்டரையும், பூனைக்குட்டியையும் மீட்ட காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை மாநகர காவல் ஆணையர் திரு. மகேஸ்குமார் அகர்வால் நேரில் வரவழைத்து பாராட்டினார்.