Police Recruitment

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இலவச வேஷ்டிகள் திருட்டு- தேடப்பட்ட நில அளவையர் கைது

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இலவச வேஷ்டிகள் திருட்டு- தேடப்பட்ட நில அளவையர் கைது

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சொந்தமான கருவூலத்தில் தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்காக இலவச வேஷ்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில் கடந்த 7-ந்தேதியன்று கருவூலத்தை திறந்து பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான 12 ஆயிரத்து 500 இலவச வேஷ்டிகள் திருடப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக வருவாய்த்துறை சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் வேஷ்டிகளை 2 சரக்கு வாகனங்களில் எடுத்து சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அப்போது நடந்த விசாரணையில் ரூ.3.5 லட்சத்துக்கு நில அளவையர் சரவணன் என்பவர் ஏற்கனவே நடந்த தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்ட வேஷ்டிகள் என கூறி மோசடி செய்து, விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து 4 பேர்களிடம் இருந்து வேஷ்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த திருட்டு வழக்கின் முக்கிய குற்றவாளியாக நில அளவையர் சரவணன் என்பவரை தல்லாகுளம் போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் தஞ்சாவரில் பதுங்கியிருந்து சரவணனை தல்லாகுளம் தனிப்படை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரது 3 வங்கி கணக்குகளையும் போலீசார் முடக்கியுள்ளனர். சரவணனை நிரந்தர பணி நீக்கம் செய்வதற்காக மதுரை மாவட்ட கலெக்டருக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.