சென்னை எழும்பூர் போலீஸ் குடியிருப்பில் 8 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிப்பு
சென்னை எழும்பூர் நரியங்காடு காவலர் குடியிருப்பில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தால் இரு சக்கர வாகனங்கள் தீயில் எரிந்தது
எழும்பூர் லேங்ஸ் கார்டன் சாலையில் உள்ள நரியங்காடு காவலர் குடியிருப்பில் சுமார் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் வசித்து வருகின்றனர் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த காவலர்களின் இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின.
காலை பணிக்கு செல்வதற்காக காவலர் ஒருவர் எழுந்து வந்து பார்த்தபோது இருசக்கர வாகனங்களில் இருந்து புகை வருவதை கண்டு உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த எழும்பூர் தீயணைப்பு துறை வீரர்கள் முழுவதுமாக தண்ணீரை பிச்சி அடித்து தீயை அணைத்தனர் வாகனத்தில் இருந்த என்ஜின் மற்றும் சைலன்ஸரில் இருந்த வெப்பத்தின் காரணமாக இரு சக்கர வாகனத்தின் கவர் மூலம் தீப்பற்றி எரிந்துள்ளதாக கூறப்படுகிறது
இருந்த போதிலும் மர்ம நபர்கள் யாரேனும் காவலர் குடியிருப்பில் புகுந்து இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்தார்களா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
பொதுமக்களை பாதுகாக்கும் காவலர் குடியிருப்பிலேயே இருசக்கர வாகனங்களை தீ விபத்துக்குள்ளாகி எரிந்திருக்கும் நிலையில் என்ன நிகழ்ந்தது என்பது குறித்து பார்ப்பதற்கு கண்காணிப்பு கேமரா கூட இல்லாமல் போலீசார் திக்குமுக்காடி வருகின்றனர்