Police Department News

தமிழகத்தில் தீவிரவாதச் செயல்களைத் தடுத்து நிறுத்த காவல் துறையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு உருவாக்கப்படும் என்று முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் தீவிரவாதச் செயல்களைத் தடுத்து நிறுத்த காவல் துறையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு உருவாக்கப்படும் என்று முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

அதன்படி அப்பிரிவை உருவாக்கும் பணியில் தமிழக போலீஸ் உயர் அதிகாரிகள் ஈடுபட்டனர். முதல் கட்டமாக இந்தியாவில் தீவிரவாத தடுப்புப் பிரிவு செயல் பாட்டில் உள்ள ஆந்திரம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் சென்று, அந்தப் பிரிவில் உள்ள போலீசாருக்கு அளிக்கப்படும் பயிற்சி, தேவையான கட்டமைப்பு வசதிகள் ஆகியவை குறித்த தகவல்களை சேகரித்தது.

அதனைத் தொடர்ந்து இந்த சிறப்பு பிரிவுக்கான ஒரு வரைவுத் திட்டத்தை தயாரித்து தமிழக அரசின் அனுமதிக்கு வழங்கினர். அந்தத் திட்டத்தில் ஒரு பயிற்சி பள்ளியைத் தொடங்கி, 18 வயதில் இருந்து 22 வயதுடைய திறமையான, துணிச்சல் மிக்க இளைஞர்களை போலீசில் இருந்து தேர்வு செய்வது, அவர்களுக்கு இந்திய ராணுவ அதிகாரிகள்

மற்றும் பிற மாநிலங்களில் செயல்படும் தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மூலம் பயிற்சி அளிப்பது என திட்டமிடப்பட்டிருக்கிறாது.

அதன் முதல் கட்டமாக சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய 4 நகரங்களில் தீவிரவாத தடுப்புப் பிரிவைத் தொடங்குவது உள்ளிட்ட பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டு இருந்தன.

அப்படியிருக்க தமிழக போலீசின் நுண்ணறிவுப் பிரிவில் புதிதாக தீவிரவாத தடுப்புப் பிரிவைத தொடங்குவதற்கு அனுமதி அளித்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலர் அமுதா உத்தரவிட்டார். இதற்காக ரூ.60.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இப்பிரிவுக்கு காவல் துறையில் இருந்து 190 பேரை தேர்வு செய்து கொளகொள்ளலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளார். மேலும் அமைச்சுப் பணியாளர் இடங்களையும் புதிதாக உருவாக்க உத்தரவிட்டுள்ளார்.

புதிதாக உருவாக்கப்படும் தீவிரவாத தடுப்பு பிரிவானது டி.ஐ.ஜி. தலைமையில் செயல்படும். இப்பிரிவில் 4 போலீஸ் சூப்பிரண்டுகள், 5 கூடுதல் சூப்பிரண்டுகள், 13 துணை சூப்பிரண்டுகள், 31 இன்ஸ்பெக்டர்கள், 61 சப்-இன்ஸ்பெக்டர்கள், 12 தொழில்நுட்ப உதவியாளர்கள், 130 ஏட்டுகள், 3 போலீசார், 33 போலீஸ் டிரைவர்கள் ஆகியோர் பணியமர்த்தப்படவிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.