Police Department News

சிதம்பரம் கொலை வழக்கு: கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

சிதம்பரம் கொலை வழக்கு: கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

சிதம்பரம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் உள்கோட்டம் சிதம்பரம் நகர காவல் நிலைய கனக சபை நகரை சேர்ந்த அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சம்பத் என்பவரின் மனைவி கிரண் ரூபணி என்பவருக்கும் கன்னியாகுமரியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் சமூக வலைத்தளத்தின் மூலம் பழக்கம் ஏற்பட்டு இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்துக்கு மீறிய உறவாக மாறியதால் இதற்கு இடையூறாக இருந்த கணவர் சம்பத் என்பவரை கொலை செய்ய திட்டம் தீட்டி முட்லூர் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் அமீர்பாஷா என்பவரின் உதவியுடன் கடந்த 30.8.2013-ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணி அளவில் கார் ஏற்றி கொலை செய்து அந்த கொலையை விபத்தாக மாற்றுவதற்கு மூவரும் முயற்சி செய்தனர்.

இதனை திறன்பட புலனாய்வு செய்த அப்போதைய சிதம்பரம் உள்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம் தகுந்த சாட்சியத்துடன் நடந்தது விபத்து இல்லை என்று கண்டறிந்து மூவரையும் கொலை வழக்கில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்.

பின்னர் இந்த வழக்கில் புலன் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், மூவரும் நீதிமன்ற பினை பெற்று வெளியே சென்றனர். வழக்கு விசாரணையை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் மூவருக்கும் சிதம்பரம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது. பிடியானை நிறைவேற்ற முடியாமல் நிலுவையில் இருந்ததால் வழக்கு மேற்கொண்டு விசாரணை செய்ய முடியாத நிலையில் இருந்தது.

இந்த நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆர்.ராஜாராம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றவுடன் தலை மறைவு குற்றவாளிகளை பிடிக்க சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் பி.ரகுபதி மேற்பார்வையில் நகர காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் விழுப்புரம் மங்கலம்பேட்டை சென்னை கன்னியாகுமரி பெங்களூரு போன்ற இடங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வழக்கின் மூன்றாவது எதிரி அமீர் பாஷா என்பவரை தனிப்படை போலீசார் விழுப்புரத்தில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உள்படுத்தினர்.

இந்தநிலையில், வழக்கில் தொடர்புடைய ராஜேஷ் (42)மற்றும் கிரண் ரூபிணி (36) ஆகியோர் கேரளம் மாநிலம் கோழிக்கோடு பகுதியில் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்தது.

தகவலின்படி, சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் ஆறுமுகம் சிறப்பு உதவியாளர் புருஷோத்தமன் தலைமை காவலர் ரமேஷ், ராமநாதன் பெண் காவலர்கள் சுதா, புனிதா ஆகியோர் பெங்களூரு சென்று தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்து சிதம்பர நகர காவல் நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை அன்று அழைத்து வந்தனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தான் திறன்பட புலனாய்வு செய்து வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம் தனிப்படையை தொடர்ந்து கண்காணித்து இரண்டு எதிரிகளையும் கைது செய்துள்ளதுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.