Police Department News

19 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ‘பதவி உயர்வு’.. 2 பேர் ஏடிஜிபி.. புத்தாண்டு பரிசு கொடுத்த தமிழக அரசு!

19 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ‘பதவி உயர்வு’.. 2 பேர் ஏடிஜிபி.. புத்தாண்டு பரிசு கொடுத்த தமிழக அரசு!

சென்னை: ஐபிஎஸ் அதிகாரிகள் 19 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 7 ஐபிஎஸ் அதிகாரிகள் ஐஜி ஆக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டின் தொடக்க நாளான இன்று, தமிழக காவல்துறையில் பணியாற்றும் 19 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. இதற்கான உத்தரவை உள்துறை முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் பிறப்பித்துள்ளார்.

திமுக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, அடிக்கடி காவல்துறை உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். பல சமயங்களில் ஐபிஎஸ் அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆண்டுதோறும், ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் புத்தாண்டின் முதல் நாளிலேயே பதவி உயர்வு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1999ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிகளான ஆனந்த்குமார் சோமனி, ஆர்.தமிழ்ச்சந்திரன் ஆகியோருக்கு ஏ.டி.ஜி.பி.யாக தமிழ்நாடு அரசு பதவி உயர்வு அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஐ.ஜியாக பதவி உயர்வு அளித்துள்ளது தமிழக அரசு. ஜெயஸ்ரீ, சாமுண்டீஸ்வரி, லட்சுமி, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், முத்துசாமி, மயில்வாகனன் ஆகியோருக்கு ஐ.ஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் 10 பேருக்கு டிஐஜியாக பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. பி.ஆர்.வெண்மதி, பி.அரவிந்தன், வி.விக்ரமன், சரோஜ்குமார் தாகூர், டி.மகேஷ்குமார், என்.தேவராணி, இ.எஸ்.உமா, ஆர்.திருநாவுக்கரசு, ஆர்.ஜெயந்தி, ஜி.ராமர் ஆகியோருக்கும் பதவி உயர்வு வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.