Police Department News

ரயில்வே காவல்துறை சார்பாக ரயில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு

ரயில்வே காவல்துறை சார்பாக ரயில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு

ரயிலில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரயில்வே காவல்துறை 5 குறும்படங்கள் தயாரித்து வெளியிட்டுள்ளது. அவை

1) Accidents in Train Trvels
( ரயில் பயணத்தில் விபத்துக்கள்)

2 ) Thefts in Train Travels
(ரயில் பயணங்களில் திருட்டு)

3) College Students Kind Attention
(கல்லூரி மாணவர்களின் கனிவான கவனத்திற்கு)

4) The Tres passer
(அத்துமீறி தண்டவாளத்தை கடத்தல்)

5) Kavalan SOS

மேலே குறிப்பிட்ட 5 குறும்படங்களும் அதில் கூறப்பட்டுள்ள தகவல்களும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள விழிப்புணர்வு செய்தியாகும் இது பற்றி ரயில்வே D.S.P., திரு.ரமேஸ் அவர்கள் கூறுகையில் மாணவர்கள் மாணவர்களாக இருக்க வேண்டும் அவர்கள் வன்முறையாளர்களாக மாறக்கூடாது அவர்கள் கொண்டு செல்லும் பைகள் புத்தகங்களை மட்டுமே சுமக்க வேண்டும் ஜல்லி கற்களை சுமக்க கூடாது. அவர்கள் பேனாவை எடுத்து செல்ல வேண்டும் கத்திகளை கொண்டு செல்லக்கூடாது. வாழ்க்கையில் புத்தியை தீட்டி முன்னேற வேண்டும் கத்தியை தீட்டி குற்றவாளிகளாக மாறக்கூடாது.
சக பயணிகளுக்கு உதவ வேண்டும் உபத்ரம் செய்யக்கூடாது தங்களின் பெற்றோர்களின் ஆசை கனவுகளை நனவாக்க கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் ரயிலில் பயணிப்போர் எவ்வாறு தங்களின் உடமைகளை பாதுகாக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.