Police Department News

விலங்குகளின் பசியையும்,தாகத்தையும் தீர்த்த காவல் ஆய்வாளர்

விலங்குகளின் பசியையும்,தாகத்தையும் தீர்த்த காவல் ஆய்வாளர்.

திருப்பரங்குன்றம் மலைப் பகுதியை சுற்றி ஆயிரக்கணக்கான குரங்குகள், மயில்கள் மற்றும் பறவைகள் வாழ்ந்து வருகின்றன. 144 தடை உத்தரவை முன்னிட்டு மக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் பறவைகளும், விலங்குகளும் உணவு மற்றும் நீர் இன்றி அழிந்து வருவதாகவும், உணவு பற்றாக்குறை ஏற்பட்டு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளை நோக்கி செல்வதால் அங்கு சில மனிதர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாவதாகவும் திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் திருமதி.மதனகலா அவர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே ஆய்வாளர் அவர்கள் மாநகராட்சி உதவியுடன் நேற்று 04.04.2020- ம் தேதி விலங்குகளுக்கு வனத்துறையினர் ஏற்கனவே அமைத்து இருந்த தண்ணீர் தொட்டியில் நீர் நிரப்பியும் காய்கறிகள் மற்றும் பழங்களை உணவாக வழங்கினார். காவல் ஆணையர் அவர்கள் ஆய்வாளரை பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.