ரயில் பயணங்களில் ஏற்படும் திருட்டை தடுப்பது எப்படி? ரயில்வே காவல் துறையின் விழிப்புணர்வு குறும்படம்
ரயில் பயணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு சுகமான அனுபவம். ஆனால் அதே ரயில் பயணத்தில் நமது உடமைகள் களவு போவதும் தொடர் கதையாக உள்ளது. இது போன்ற திருட்டுக்களிலிருந்து நமது உடமைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பாக ரயில்வே காவல்துறை ஒரு குறும்படம் எடுத்து ரயில் பயணிகளுக்கு சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த குறும்படம் இந்த ஆண்டு சென்ற மாதம் சென்னை தீவு திடலில் நடைபெற்ற பொருட்காட்சியில் ஒளிபரப்ப பட்டது. இந்த படத்தை அனைத்து பொதுமக்களும் கண்டு விழிப்புணர்வு அடைய வேண்டும் என்ற நல்ல நோக்குடன் இதற்கான QR code தயார் செய்யப்பட்டுள்ளது இதை ஸ்கேன் செய்து இந்த விழிபுணர்வு குறும்படத்தை அனைவரும் பார்க்கலாம்.
அந்த QR code கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் திருட்டு சம்பந்தமாக ரயில்வே ADGP V. வனிதா IPS அவர்கள் கூறுகையில் கடந்த ஆண்டு மொத்த ரயில் திருட்டு 3 கோடியே 78 லட்சம் நடந்துள்ளது அதில் இவரது டீம் திறமையாக பணியாற்றி 1 கோடியே 54 லட்சம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது என்றார்