Police Recruitment

திருமணத்தை தடுத்ததால் நடந்த விபரீதம்…மாமன், மச்சான் மருத்துவமனையில் அனுமதி…!

இராணிப்பேட்டை மாவட்டம், பானாவரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் வனிதா. இவருக்கும் இவரது உறவினராக படப்பையில் உள்ள பூண்டு வியாபாரியான செல்வத்துக்கும் இடையே 2010ல் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த இரண்டு ஆண்டுகளிலேயே வனிதா இறந்து விட்டார்.இதைத்தொடர்ந்து, செல்வத்துக்கு, அமுதா என்கிற பெண்ணை திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தார் முடிவு செய்துள்ளனர். இந்த திருமணத்துக்கு இறந்துப்போன வனிதாவின் சகோதரர் காத்தவராயன் தடை ஏற்படுத்தி செல்வத்திடம் தகராறு செய்துள்ளார்.இந்த தகராறுகள் சில வாரங்களாக நடந்து வந்தநிலையில், காத்தவராயனும், அவரது உறவினர்களும் சேர்ந்து அமுதாவுக்கு வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து உடனடியாக திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியான செல்வம், காத்தவராயன் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் சண்டைப்போட்டுள்ளார்.இந்த சண்டை டிசம்பர் 19ந்தேதி இரவு அதிகமாகி காத்தவராயன் குடும்பம், செல்வம் குடும்பம் இரண்டும் அடித்துக்கொண்டுள்ளது. கட்டை, கத்தியை வைத்துக்கொண்டு சண்டை போட்டுக்கொண்டுள்ளனர். இதில், செல்வம், காத்தவராயன், தாயம்மா உட்பட 5 பேர் கத்திக்குத்துக்கு ஆளாகி ரத்தம் சொட்ட சொட்ட சண்டைப்போட்டுள்ளனர்.இதனால் பயந்துப்போன அக்கம் பக்கத்தினர் சண்டைப்போட்டவர்களை விலக்கிவிட்டு அவர்களை கொண்டு வந்து வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கிருந்து அவர்களை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Leave a Reply

Your email address will not be published.