ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.15 கோடி ஏமாற்றிய 4 நபர்கள் கைது.
சென்னை மணலி கிழ்கண்டை வீதி பெரிய தோப்பு கோவில் தெருவில் என்ற விலாசத்தில் வசித்து வரும் துரை என்பவரின் மகன் திரு பாலாஜி என்பவர் சென்னை காவல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரில் கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் 1, அன்னை கேப்பிட்டல் சொலிசன்ஸ் 2, அன்னை இன்போசாப்ட் சொலிசன்ஸ் ,3. அன்னை அகாடமி பிரைவேட் லிமிடெட் மற்றும் 4,தமிழ் அன்னை ஹாலிடேஸ் லிமிடெட் என்ற பெயரில் ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தை நடத்தி வந்த தினேஷ் குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து மேற்படி அவர்களது ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக விளம்பரம் செய்து ஆசை வார்த்தைகள் கூறி தன்னிடமும் மற்றும் தன்னைப் போல பல நபர்களிடம் இருந்து சுமார் ரூ.88,10,000/- வரை முதலீடாக பணத்தைப் பெற்றுக் கொண்டு சொன்னபடி லாப பணம் கொடுக்காமலும் முதலீடு செய்த பணத்தை திரும்ப கொடுக்காமலும் ஏமாற்றி வருவதாகவும் எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்யப்பட்டு வந்தது.
புலன் விசாரணையில், சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் அன்னை இன்போ சாப்ட் சொலுஷன் அன்னை கேப்பிட்டல் சொலுஷன் மற்றும் தமிழ் அன்னை ஹாலிடேஸ் லிமிடெட் என்ற பெயரில் நிறுவனத்தை நடத்தி வந்த மேற்படி நபர்கள், வாடிக்கையாளர்களிடம் ரூ.1,00,000/-முதலீடு செய்தால் அந்த பணத்தை online-இல் Trading செய்து மாதம் ரூபாய் 17,100 வீதம் 12 மாதங்கள் லாபம் பணமாக கொடுப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி சுமார் 300 நபர்களிடமிருந்து ரூபாய் 15 கோடி மேல் பெற்றுக் கொண்டு வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தது தெரிய வந்தது.
இவ் வழக்கில் தொடர்புடைய எதிரிகளை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சந்தி ராய் ரத்ததோர் இ. கா .பா அவர்களின் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையாளர் டாக்டர் பி.கே. செந்தில்குமாரி இ.கா.ப அவர்கள் மேற்பார்வையில் மத்திய குற்றப்பிரிவு-2 காவல்துறை ஆணையர் திருமதி .N.S நிஷா, அவர்களின் கண்காணிப்பில், மத்திய குற்ற பிரிவு -2, காவல் கூடுதல் துணை ஆணையாளர் திரு.S. முத்துவேல் பாண்டி அவர்களின் கண்காணிப்பில், மத்திய குற்றப்பிரிவு EDF-1 காவல் உதவி ஆணையாளர் திரு. S. ஜான் விக்டர்,, அவர்களின் தலைமையிலான காவல் குழுவினர் தலைமறைவாக இருந்த 1) தினேஷ்குமார் ஆ/வ 37,த/பெ சசிதரன், சாய்ராம் தெரு பள்ளிக்கரணை, சென்னை 2, பிரேம் கிருபாள் ஆ/வ 38 த/பெ வின்சன்ட் எண் 1063, 7 குறுக்கு தெரு,9 வது மெயின் ரோடு ராம் நகர் தெற்கு மடிப்பாக்கம் சென்னை.3, திலீப் ஆ/வ 41,த/பெ சுதர்சன், என் 4B ஸ்ரீநிதி விலாஸ் படூவூர் வீரனையாம் தெரு கேளம்பாக்கம், காஞ்சிபுரம். மற்றும் 4, அருண்குமார் ஆ/வ 40 த/பெ பன்னீர் எண் 59, கிருஷ்ணா என்கிளைவ் கோவிந்தசாமி தெரு ESIC நகர் சேலையூர் சென்னை ஆகியோர்களை 21.02.2024 ம் தேதி கைது செய்து கணம் நடுவர் CCB & CBCID நீதிமன்றம் எழும்பூர் அவளிடம் ஆசை படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்கள். மேலும் பொதுமக்கள் இது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது.
புலன் விசாரணை அதிகாரி திருமதி.L.கலாராணி
தொலைபேசி எண்: 63806 66378
CCB Cr.No 206/2023 u/s 406,420 r/w/20CB)