வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது காவல் துறையினருக்கு மட்டும் தடையா?
சமீபத்தில் நீதி மன்ற உத்தரவின்படி தமிழ்நாடு டி.ஜி.பி.அவர்கள் தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த காவல் அலுவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் அவர்களின் சொந்த வாகனங்களில் காவல் அல்லது போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்று ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார்கள் அது அனைத்து செய்தி தாள்களிலும் வெளி வந்தது. போலீசார் அதை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்
ஆனால் தமிழ்நாட்டை பொருத்தவரை பெறும்பாலான சட்டக்கல்லூரி மாணவர்கள் வழக்கறிஞர்கள் பத்திரிக்கை அச்சு மற்றும் காணொளி நிருபர்கள் மருத்துவர்கள் வழக்கறிஞர்கள் ஆகியோர்கள் அவர்கள் சார்ந்துள்ள துறை சார்ந்து ஒவ்வொரு வாகனத்திலும் முன்பும் பின்பும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு மிரட்டுவது போல் செல்கின்றனர்.
அனைத்திற்கும் மேலாக அரசியல்வாதிகள் வாகன நம்பர் பிளேட்டை அவர்களின் கட்சி சார்ந்த வர்ணத்தில் வைத்து கொள்கின்றனர்.அவர்கள் இஷ்டம் போல நம்பர் பிளேட்டை வடிவமைத்து கொள்கிறார்கள்.வண்டியின் முன்புறமாக அவர்கள் சார்ந்துள்ள கட்சியின் கொடியை பறக்க விடுகிறார்கள். அவர்கள் சார்ந்து இருக்கிற கட்சியின் தலைவர் படத்தை கூட தெரியும்படி வைத்து கொள்கிறார்கள்
வழக்கறிஞர் பிரஸ் டாக்டர் இன்ஜினியர் மற்றும் அரசியல்வாதிகள் அவர்கள் வாகனங்களில் ஸ்டிக்கர் வைத்து செல்கின்றனர் இது மோட்டார் வாகனச்சட்டத்திற்கு எதிரானது. அவர்களின் மீது நடவடிக்கை காவல்துறையினர் எடுக்க வேண்டும். காவல்துறையினர் அரசு வாகனங்களில் காவல் அல்லது போலீஸ் என்று ஸ்டிக்கர் இருந்தால் அவர்கள் அதாவாது ஆய்வாளர் உதவி ஆணையர் துணை ஆணையார் ஆகியோர் பணி நிமித்தமாக தடையின்று விரைந்து செல்ல முடியும் ஆனால் வழக்கறிஞர் பத்திரிக்கையாளர்கள் இவர்களுக்ளுக்கு அடையாள அட்டை உள்ளது. அதை பயன்படுத்தி கொள்ள முடியும் இப்படியிருக்க வாகனத்தில் எதற்கு ஸ்டிக்கர் எனவே மோட்டார் வாகன சட்த்திற்கும் விதிமுறைகளுக்கும் எதிராகவும் யார் நடந்தாலும் நம்பர் பிளேட்டில் மாற்றம் செய்தாலும் அவர்கள் மீதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்