இரவு ஆட்டோவில் பயணித்தபோது தவறவிட்ட விலையுயர்ந்த ஐபோனை ½ மணி நேரத்தில் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த வடபழனி காவல் நிலைய காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.
சென்னை, கே.கே.நகரைச் சேர்ந்த பெண்மணி 14.12.2019 அன்று இரவு சுமார் 10.45 மணிக்கு வடபழனி, Forum Vijaya Mall அருகிலிருந்து ஒரு ஆட்டோவில் பயணித்து வீட்டிற்கு சென்ற பின்னர், அவரது விலையுயர்ந்த ஐபோனை, ஆட்டோவில் தவறவிட்டது தெரியவந்தது. உடனே, R-7 கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு சென்று கூறியபோது, அவர்கள் R-8 வடபழனி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
உடனே அன்றைய தினம் இரவு பணியிலிருந்த காவல் ஆளிநர்கள் மேற்படி தொலைந்து போன ஐ-போன் குறித்த தகவல்கள் ஏற்கனவே, பதிவு செய்யப்பட்ட மற்றொரு போனின் மூலம் கண்டறிந்து புகார்தாரரின் “ஐபோனை” விசாரணைக்குப் பின்னர் ஒப்படைத்தனர்.
மேற்படி சம்பவத்தில் புகார் கொடுத்த ½ மணி நேரத்தில் ஆட்டோவில் தவறவிட்ட விலையுயர்ந்த ஐபோனை கண்டுபிடித்து ஒப்படைத்த R-8 வடபழனி காவல்நிலைய தலைமைக்காவலர் T.ராஜா (த.கா.32397) மற்றும் முதல்நிலைக் காவலர் S.மோகன் (மு.நி.கா.43872) ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 21.12.201 9 அன்று நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
ச அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.