போலீசார் ரோந்து பணியில் தொய்வு கூடாது, டிஜிபி., உத்தரவு.
தேர்தல் பணியை காரணம் காட்டி போலீசார் ரோந்து பணியில் தொய்வு காட்ட கூடாது என
டிஜிபி. சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலையொட்டி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் காவல் நிலையங்களில் ஒன்றிரண்டு போலீசார் தான் பணியில் உள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணி காரணமாக போலீசார் ரோந்து செல்வதில் தொய்வு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது
இது குறித்து உளவுத்துறை வாயிலாக டிஜிபி., சங்கர்ஜிவால் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது
இதையடுத்து சுற்றறிக்கை வாயிலாக பிறப்பித்ள்ள உத்தரவில் குற்றத்தடுப்பு மற்றும் பகல் இரவு நேர ரோந்து பணியில் எவ்வித தொய்வும் ஏற்படக்கூடாது
ரோந்து பணிகள் குறித்து இன்ஸ்பெக்டர்கள் மற்றும் டிஎஸ்பிகள் ஆய்வு செய்து எஸ்பிக்களுக்கு அறிக்கையளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.