Police Department News

தமிழக காவல்துறையில் இளநிலை செய்தியாளர்கள் வேலை வேண்டுமா?

தமிழக காவல்துறையில் இளநிலை செய்தியாளர்கள் வேலை வேண்டுமா?

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 54 இளநிலை செய்தியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு முன் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன அறிவிப்பு எண் 01/2024
பணிJunior Reporter
காலி இடங்கள் 54.

சம்பளம்
மாதம் 36,200, – 1,14,800
வயது வரம்பு. 1.7.2023 ன்படி பொதுப் பிரிவினர். 32, வயதிற்குள்ளும், பி.சி. பி.சி.எம்.,எம்.பி.எம்.,டி.சி. பிரிவினர் 34 வயதிற்குள்ளும், எஸ்.சி.எஸ்.சி.ஏ.எஸ்.டி. பிரிவினர் 37 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

தகுதி தமிழை ஒரு பாடமாக கொண்டு பிளஸ் 2, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் தமிழக அரசால் நடத்தப்படும் ஆங்கில தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வில் உயர் நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதாவது ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 120 வார்த்தைகள் என்ற வேகத்தில் எழுதும் திறன் மற்றும் நிமிடத்திற்கு 45 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் பணிபுரியும் திறனும் மற்றும் தமிழில் சுருக்கெழுத்தில் எழுதும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை தமிழ் மொழி திறனை பரிசோதிக்கு வகையில் நடத்தப்படும் எழுத்து தேர்வு சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

எழுத்து தேர்வு மற்றும் பிற விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை
www.eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன் லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

ஆன் லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி. 15.04.2024.

Leave a Reply

Your email address will not be published.