Police Recruitment

ஆட்டோ டிரைவரை தாக்கி பணம் பறித்தவர் கைது

ஆட்டோ டிரைவரை தாக்கி பணம் பறித்தவர் கைது

மதுரை செல்லூர் பாலம் ஸ்டேஷன் சாலையைச் சேர்ந்தவர் பழனி வயது (60) மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுகிறார். இவர் கடந்த மே8ம் தேதி இரவு மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் சவாரி ஏற்றுவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது வந்த ஆட்டோவில் நான்கு பேர் கொண்ட கும்பல் பழனியை மிரட்டி அவரது ஆட்டோவில் ஏறியுள்ளனர். பின் ஒத்தக்கடை அடுத்த தட்டான்குளத்திற்கு அவரை அழைத்துச் சென்று ரூபாய் 1500 பணம் பறித்ததுடன் அவர் அணிந்திருந்த வெள்ளிச்செயினையும் பறித்து தப்பியுள்ளனர். இதுகுறித்து பழனி புகாரில் மாட்டுத்தாவணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில் பணம் பறித்தது கருப்பாயூரணியை சேர்ந்த சதீஷ் வயது( 24 ) மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் சதீஷை கைது செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.