Police Department News

தொடர்ச்சியாக 100 இடங்களில் டூவிலரில் செயின் பறித்த திகில் ஆசாமி சிக்கியது எப்படி ?

தொடர்ச்சியாக 100 இடங்களில் டூவிலரில் செயின் பறித்த திகில் ஆசாமி சிக்கியது எப்படி ?
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக டூவிலரில் வரும் மர்ம ஆசாமி பெண்களில் அதிரடியாக செயின் பறித்து செல்லும் சம்பவம் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்தது. இந்தநிலையில் இந்த செயின் கொள்ளையன் திருச்சியை குறி வைத்து தொடர்ச்சியாக செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததால் திருச்சி மாநகர கமிஷனர் வரதராஜீலு துணை ஆணையர் வேதரத்தினத்திடம் தனிப்படை அமைத்து பிடிக்க உத்தரவிட்டார்.இந்தநிலையில் திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் நாகையா. போலீஸ் ஏட்டு. ராமநாதபுரம் கேணிக்கரை காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பரிமளா இவர் மகள்களுடன் திருச்சியில் வசித்து வருகிறார்.கடந்த 26ம் தேதி காலை மகள்களை அழைத்துக்கொண்டு அண்ணா ஸ்டேடியத்திற்கு பரிமளா நடந்து சென்றார். அப்போது, பின்னால் பைக்கில் வந்த வாலிபர் பரிமளா கழுத்தில் கிடந்த 6 பவுன் செயினை பறித்து சென்றார்.அன்று மாலையில் மீண்டும் அதே சாலையில் தனலட்சுமி (72) என்பவரிடம் இருந்து 10 பவுன் செயின் பறிக்கப்பட்டது.இதுகுறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிந்து செயின் பறிப்பு கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில், டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் தனிப்படை போலீசார் விரட்டி சென்று பைக்கில் மோதி, வாலிபர் ஒருவரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர்.இதில் அவர் கேரளாவை சேர்ந்த முகமது முஸ்தபா (30), செயின் பறிப்பு கொள்ளையன் என தெரியவந்தது. தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தியதில் திடுக் தகவல்கள் தெரியவந்தது.இது குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்த போது… முகமது முஸ்தபா செயின் பறிப்பு கொள்ளையில் கில்லாடி. தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுவரை பெண்களிடம் 700 பவுன் செயின்களை பறித்துள்ளான்.கேரளாவை சேர்ந்த அவர் அங்கிருந்து காரில் தமிழகம் வந்து நாமக்கல்லில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்குவார். பின்னர் அங்கிருந்து பைக்கில் திருச்சி உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று செயின் பறிப்பில் கைவரிசையை காட்டி வந்துள்ளான்.திருச்சி போலீஸ் ஏட்டு நாகையா மனைவி பரிமளாவிடமும் செயின் பறித்தது இவர்தான் என தெரியவந்தது என்றனர். தொடர்ந்து முகமதுமுஸ்தபா வேறு எந்தந்த மாவட்டங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டார். இதுவரை எத்தனை பெண்களிடம் எவ்வளவு நகைகள் பறித்துள்ளார். இவர் மட்டும் இந்த செயலில் ஈடுபட்டாரா? அல்லது கேரளாவிலிருந்து கும்பலாக வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வருகிறார்களா, இதுவரை பறித்த நகைகளை எங்கு வைத்துள்ளார் என துணை கமிஷனர் வேதரத்தினம் விசாரணை நடத்தி வருகின்றார்.

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Leave a Reply

Your email address will not be published.