அந்தியோதயா விரைவு ரயிலில் போலி டிடி ஆர் கைது
மதுரை: அந்தியோக்கியா அதிவிரைவு ரயில் தினசரி தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் வரை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் வழக்கம் போல் நேற்று இரவு 11 மணி அளவில் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு இன்று காலை ஆறு பத்து மணி அளவில் திருச்சியை அடைந்தது.
அங்கு ரயில் டிக்கெட் பரிசோதகர் உரையில் ஏறிய நபர் பயணிகளிடம் டிக்கெட்டை வாங்கி பரிசோதனை செய்து வந்துள்ளார். அதே ரயிலில் மதுரை கோட்டத்தின் தலைமை பயணச்சீட்டு ஆய்வாளர் சரவண செல்வி என்பவரும் பயணம் செய்தார்.
இவர் இந்த டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்ட நபரிடம் எந்த ரயில்வே கோட்டத்தில் பணிபுரிகிறார் உள்ளிட்ட விவரங்களை கேட்டுப் பொழுது மதுரையில் பணி புரிவதாக கூறியிருக்கிறார்.
நானும் மதுரையில் தான் பணிபுரிகிறேன் என்று அவரது அடையாள அட்டைகளை வாங்கி சோதனை செய்ததில் அவர் வைத்திருந்த து போலி அடையாள அட்டை என்பதை கண்டறிந்தார்.
இதனை அடுத்து மதுரை ரயில் நிலையத்தை ரயில் அடைந்தவுடன் ரயில்வே பாதுகாப்பு பணியிடம் போலீஸ் டிடிஆரை ஒப்படைத்தார்.
இதைத்தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை நடத்திய பொழுது அந்த போலி டிடிஆர் கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பதும் தெரிய வந்தது
தொடர்ந்து அவரிடம் எதற்காக இப்படி செய்தார் என்பதை ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை செய்து வருகின்றனர்.