`வாழவேண்டிய வயதில் இப்படி ஆகிவிட்டதே!’- இளம்பெண்ணின் மரணத்தால் கதறிய பட்டுக்கோட்டை குடும்பம்குறிப்பாக நாத்தனார் எதற்கெடுத்தாலும் திட்டுவது, தான் எந்த வேலையும் செய்யாமல் அல்பாத்தையே எல்லா வேலைகளையும் செய்ய சொல்வது போன்ற கொடுமைகளை செய்து வந்துள்ளார்.
பட்டுக்கோட்டை அருகே இளம் பெண் ஒருவர் தூக்கில் தொங்கியபடி மர்மமான முறையில் இறந்து விட அவரது தந்தை எனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீஸில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்களை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் சாகுல்ஹமீது. இவருடைய மனைவி அல்பாத். இவர்களுக்கு இரண்டு வருடத்திற்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. குழந்தை இல்லை. சாகுல்ஹமீது வெளி நாட்டில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அல்பாத் வீட்டில் தூக்கில் தொங்கியபடி இறந்துள்ளார். அவரின் தந்தை எனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அல்பாத்தின் நாத்தனார், மாமியார், பெரிய மாமியார் ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.இது குறித்து அல்பாத் தரப்பில் விசாரித்தோம், இரண்டு வருடங்களுக்கு முன்பு சாகுல் ஹமீது மற்றும் அல்பாத்திற்கு திருமணம் நடைபெற்றது. அடுத்த மூன்று மாதத்தில் சாகுல் ஹமீது வெளி நாட்டிற்கு வேலைக்குச் சென்று விட்டார். அதிராம்பட்டினத்தில் உள்ள வீட்டில் நாத்தனார் ஹைஜாம்மாள், மாமியார் ராபிக் கமால் மற்றும் பெரிய மாமியார் சுபைதோ ஆகியோருடன் அல்பாத் வசித்து வந்தார். ஹைஜாம்மாள் அதிராம்பட்டினத்திலேயே திருமணம் செய்து கொடுக்கப்பட்டதால் தனது கணவர் வீட்டில் வசிக்காமல் பிறந்த வீட்டிலேயே இருந்துள்ளார்.சில மாதங்கள் எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. அதன் பிறகு அவ்வப்போது அல்பாத் தன் அப்பா குல்புதீனிடம்
அப்பா என்னை இங்க கொடுமைப்படுத்துறாங்க’ எனக் அழுது கொண்டே சொல்லக் கணவர் வந்ததும் எல்லாம் சரியாகிவிடும் எனக் கூறி சமாதான படுத்தியிருக்கிறார். அதன் பிறகு கொடுமைகள் அதிகமாகத் தொடங்கியுள்ளன. குறிப்பாக நாத்தனார் எதற்கெடுத்தாலும் திட்டுவது, தான் எந்த வேலையும் செய்யாமல் அல்பாத்தையே எல்லா வேலைகளையும் செய்யச் சொல்வது போன்ற கொடுமைகளைச் செய்து வந்துள்ளார்.பல சமயம் ஹைஜாம்மாள் ஒரு சைகோ போல் நடந்து கொண்டுள்ளார். இதை தன் பிறந்த வீட்டில் தொடர்ந்து சொல்லி வந்துள்ளார் அல்பாத். இந்த நிலையில் நேற்று வீட்டில் தூக்கில் தொங்கியபடி இறந்துள்ளார். இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்று பேரிடமும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற தினத்தில் அல்பாத் உட்பட நான்கு பேருமே வீட்டிலிருந்துள்ளனர் இருந்துள்ளனர்.அப்போதும் கொடுமை அரங்கேறியிருக்கிறது. வீட்டிற்குள் ஒரே சத்தம் கேட்டதாக அக்கம் பக்கத்தில் தெரிவித்தனர். அதன் பிறகு மருமகள் தூக்கில் தொங்கி இறந்துவிட்டார் என அழுதுள்ளனர். பின்னர் ஒரத்தநாட்டில் வசிக்கும் அல்பாத்தின் தந்தை உள்ளிட்டவர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். வாழ வேண்டிய வயதில் இப்படி சடலமாக கிடக்கிறாளே என அல்பாத்தின் குடும்பமே கதறியழுதனர்.அல்பாத்தை மூன்றுபேரும் சேர்ந்துதான் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். குத்புதீன் கொடுத்த புகரின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் போலீஸ் விசாரணையில் நடந்தவற்றை நாங்கள் கூறியிருக்கிறோம். இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்த சாகுல்ஹமீது உடனே புறப்பட்டு அதிராம்பட்டினம் வந்துவிட்டார். கண்கள் கலங்க அல்பாத்தை பார்க்க வேண்டும் என கூற முதலில் குத்புதீன் தரப்பில் மறுத்து விட்டனர்.கடைசியாக என் மனைவி முகத்தை ஒரு முறை பார்த்து கொள்கிறேன் என கூற பின்னர் போலீஸார் பாதுகாப்புடன் தன் மனைவியை பார்த்து விட்டு சென்றார். அதன் பிறகு அல்பாத் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவரது உடலை பெற்று கொண்டு இறுதி சடங்கை செய்தனர” என்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் விசாரித்தோம், “சாவில் மர்ம இருப்பதாக புகார் கொடுக்கப்பட்டதையடுத்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தினோம் .இது தொடர்பாக ஆர்.டி.ஒ விசாரனை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது விசாரணையில் முடிவில் தான் மற்றவை தெரிய வரும்” என்றனர்.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் :திரு சந்தோஷ் அம்பத்தூர்