கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 1,00,000 அபராதம் பெற்று தந்த மதுரை மாவட்ட காவல்துரையினர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உட்கோட்டம் செக்கானூரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 16.07.2022 ஆம் ஆண்டு சட்ட விரோதமாக கஞ்சாவை விற்பனைக்கு வைத்து இருந்த முருகன் (57) பசுபதி (43) ஆகிய இருவரையும் NDPS வழக்கில் கைது செய்து செக்கானூரணி காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு மதுரை கூடுதல் போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.B.k. அரவிந்த்.,இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி செக்கானூரணி காவல் ஆய்வாளர் திருமதி. திலகராணி மற்றும் நீதிமன்ற தலைமை காவலர் திரு. பிச்சைமணி அவர்கள் சீரிய முயற்சியால் மதுரை கூடுதல் போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,00,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளார்கள்.