பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு விதித்தொகுப்பு, 2023
(The Bharatiya Nagarik Suraksha Sanhita, 2023) படி காவல் நிலையத்தில் புகார் செய்வது எப்படி?
குற்றவியல் விசாரணை முறை விதி பிரிவு 154 ல் போலீசார் வழக்கு பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்கிறார்கள்.
இதில் காவல் துறையினர் எந்த மாதிரி வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கும்
இப்பொழுது பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு விதிகள் 2023 வந்த பிறகு எந்த பிரிவில் இது சொல்லப்பட்டிருக்கிறது என்று பார்போம்
குற்றவியல் நடைமுறை விதிகள் பிரிவு 154 க்கு இணையான பிரிவு BNSS ல் பிரிவு 173 இது சேப்டர் 13 ல் வந்துள்ளது இதன் தலைப்பு காவல்றைக்கு தகவல் தெரிவித்தல் மற்றும் காவல்துறையினரின் புலனாய்வு செய்வதற்கான அதிகாரம் என உள்ளது.
அத்தியாயம் 13 ல் இந்த பிரிவு 173 முதல் இது 196 வரை உள்ளது இந்த அத்தியாயம் இரண்டு பிரிவாக உள்ளது முதலாவது காவல்துறைக்கு குற்ற சம்பவம் தொடர்பாக தகவல் கொடுத்தல் இரண்டாவது காவல்துறையினரின் புலனாய்வு செய்வத ற்கான அதிகாரம்
இப்போது பிரிவு 173 ஐ பார்ப்போம் பிரிவு 173(1) இதில் கைது செய்வதற்குறிய குற்றம் தொடர்பான தகவலை காவல்துறையினருக்கு தெரிவித்தல் இதை நேராக காவல் நிலையம் வந்து மனுவாகவோ அல்லது வாய்மொழியாகவோ குற்றச் சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கலாம். அல்லது எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் மூலமாகவோ தெரிவிக்கலாம் அதாவது காவல்நிலையம் வராமலேயே மொபைல் போன் மூலமாக SMS, வாட்ஸ்அப், இ மெயில், இணையதளம் மூலமாகவும் குற்றபுகாரை தெரிவிக்கலாம்.
வாய்மொழியாக புகார் கொடுக்கும் பொழுது புகாரை பெறுபவர் அவர் கூறுவதை எழுதிக் கொள்ள வேண்டும் பிறகு அதை அவருக்கு வாசித்து காண்பித்து அதில் கையொப்பம் பெற வேண்டும் வேண்டும். இதன் நகல் ஒன்று புகார் கொடுத்தவருக்கு கன்டிப்பாக கொடுக்க வேண்டும்.
எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் மூலமாக அதாவது மொபைல் போன் மூலமாகவோ எஸ் எம் எஸ் மூலமாக whatsapp மூலமாகவோ இணையதளம் மூலமாக பெறப்படும் புகாரை பதிவு செய்து விட்டு அதற்கு ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் புகார் கொடுத்தவர் புகார் கொடுத்த 3 தினங்களுக்குள் புகார் கொடுத்த காவல் நிலையம் வந்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துள்ள அதில் கையெப்பம் இட வேண்டும் அதன் பின் இந்த புகாரின் நகல் ஒன்று புகார் கொடுத்தவருக்கு கன்டிப்பாக கொடுக்க வேண்டும்.
புகாரை வாய் மொழியாக கொடுக்கும் போது அந்த புகார் பெண்கள் பாலியல் குற்றத்தொடர்புடையதாக இருந்தால் அதுவும் புதிய ஐ.பி.சி.,யான B.N.S. 2023 (பாரத்திய நியாய சன்ஹிதா 2023) ன் பிரிவுகள் 64 முதல் 79 வரையிலான மற்றும் பிரிவு 124 பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்மந்தமானதாக இருந்தால் அந்த வாக்கு மூலத்தை ஒரு பெண் காவல் அதிகாரிதான் பதிவு செய்ய வேண்டும் மேலும் பாதிக்கப்பட்ட பெண் மனநலம் பாதிக்கப்பட்டவராகவோ பேச மற்றும் கேட்ட முடியாத வகையில் உடல் நலம் பாதிக்கப்பட்டவராகவோ இருந்தால் உடன் ஒரு மொழிபெயர்ப்பாளர் இன்டர்பிரைட்டர் அதாவது ஸ்பெசல் எஜுகேட்டர் வைத்து கொள்ள வேண்டும் அதுவும் அந்த வாக்கு மூலத்தை வீடீயோ ரெக்கார்ட் செய்து அதை நீதி மன்ற நடுவரிடம் காண்பித்து ஸ்டேட்மெண்டாக வாங்க வேண்டும் மேலும் இந்த வாக்கு மூலத்தை பாதிக்கப்பட்ட பெண்ணின் இருபிடத்திலோ அல்லது அவர் விரும்பும் இடத்திலோ வைத்துதான் வாங்க வேண்டும் என்று BNSS 2023 பிரிவு 173(1)சொல்லுகிறது
குற்ற சம்பவம் எந்த பகுதியில் நடந்தாலும், எந்த காவல் நிலையத்திலும் அந்த குற்றம் சம்பந்தப்பட்ட புகாரை கொடுகலாம் என்று இந்த புதிய சட்டம் சொல்கிறது.
பிரிவு. 173 (2) இதில் குற்ற புகார் தகவல் கொடுத்தவருக்கோ அல்லது பாதிக்கப்பட்டவருக்கோ புகாரின் நகல் ஒன்றை இலவசமாக கொடுக்க வேண்டும் மேலுல் முதல் தகவல் அறிக்கையின் நகலும் இலவசமாக கொடுக்க வேண்டும் என்று இந்த பிரிவு கூறுகிறது.
பிரிவு 173 (3) புகாரில் கூறப்பட்ட குற்றம் 3 வருடத்திற்கு மேல் 7 வருடத்திற்கு கீழ் தண்டனை வழங்க கூடிய குற்றமாக இருந்தால் அந்த புகாருக்கு DSP அந்தஸ்துக்கு குறையாத உயரதிகாரியின் அனுமதியின் பேரில் FIR பதிவு செய்ய ஆரம்பகட்ட விசாரணை செய்ய அதிகபட்சம் விசாரணைக்கு 14 நாட்கள் எடுத்து கொள்ளலாம். 7 வருடத்திற்கும் அதற்கு மேல் தண்டனை வழங்க கூடிய குற்றமாக இருந்தால் உடனே முதல்தகவல் அறிக்கை பதிய வேண்டும் என்று இந்த பிரிவு கூறுகிறது.
பிரிவு 173 ( 4 ) புகார்தாரர் கொடுத்த புகாரின் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காமலும் முதல் தகவல் அறிக்கை பதியாமலும் அல்லது காலதாமதப்படுத்தினால் காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு ஒரு மேல் முறையீடு செய்து நடவடிக்கை எடுக்கலாம். அதுவும் நடக்கவில்லை என்றால் நீதி மன்றத்தில் புகார் செய்து நடவடிக்கை எடுக்கலாம்