மதுரை அரசு மருத்துவ மனையில் மதுரை போலீஸ் கமிஷனர் திடீர் ஆய்வு
நேற்று இரவு அரசு மருத்துவ மனை காவல்நிலையத்தில் மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனையில் பராமரிக்கப்படும் ஆவணங்களை ஆய்வு செய்து சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள் நோயாளிகள், மற்றும் மருத்துவர்கள் வருகை குறித்தும் ஆய்வு செய்தார்.
மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள் செவிலியர்கள் பணியாளர்கள் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தொடர்சியாக மருத்துவ மனை வளாகத்திற்குள் போலீசார் ரோந்து மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார் பொது மக்களிடம் இருந்து வரும் புகார்கள் குறித்து உடனடியாக மனுப் பெற்று அதற்கு தீர்வு காண வேண்டும் என கூறினார். மருத்துவ மனை வளாகத்தில் கேட்பாறின்றி நிறுத்தப்படும் வாகனங்கள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். மற்றும் சந்தேகத்திற்குறிய நபர்களிடம் விசாரணை நடத்தி சமூகவிரோதிகளின் செயல்பாடுகள், நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும் என அறிவுறித்தினார்.