Police Department News

மதுரை முடக்குச் சாலையில் நவீன தானியங்கி சிக்னல் மதுரை மாநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார்

மதுரை முடக்குச் சாலையில் நவீன தானியங்கி சிக்னல் மதுரை மாநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார்

மதுரை மாநகரில் ஏற்கனவே போக்குவரத்தை ஒழுங்குபடுத்த 32 தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆறாம் தேதி வெள்ளிக் கிழமை மதுரை முடக்குச்சாலை சந்திப்பில் புதிதாக தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டது இது மதுரை மாநகரின் மேற்கு நுழை வாயிலின் முக்கிய பகுதியின் ஒன்றாக திகழ்வதுடன் கேரளா மாநிலம், தேனி மாவட்ட நெடுஞ்சாலையாகவும் மதுரை புறநகர் பகுதிகளிலிருந்து வாகனங்கள் நகருக்குள் வந்து செல்லும் முக்கிய பகுதியாகவும் கன்னியாகுமரி ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையின் மூலமாக மதுரை மாநகருக்குள் வாகனங்கள் வந்து செல்லும் பிரதான சாலையாகவும் உள்ளது. மேலும் தேனி ரோடு, துவரிமான் ரோடு, மற்றும் காளவாசல் சந்திப்பு ஆகிய சாலைகளை இணைக்கக்கூடிய முடக்குச்சாலை மும்முனை சந்திப்பில் தற்சமயம் ஏற்பட்டு வரும் வாகன போக்குவரத்தால் ஏற்படும் நெரிசலை குறைக்கவும் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கவும் மேலும் அப்பகுதியில் நடைபெற்று வரும் குற்ற சம்பவங்களை கண்காணிக்கவும் போக்குவரத்து தானியங்கி சிக்னல் மற்றும் நவீன காவல் உதவி மையமானது அமைக்கப்பட்டுள்ளது மேலும் வாகன போக்குவரத்தை சீர் செய்யவும் ஒலிபெருக்கி மூலம் விபத்து மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகளை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கவும் CCTV கேமராக்ள் மூலம் போக்குவரத்து விதி மீறல் சம்பவங்கள் மற்றும் குற்ற செயல்களை கண்காணிக்கவும் உதவியாக இருக்கு வகையில் இந்த தானியங்கி சிக்னல் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது அதில்

  1. Three primary signal post and two secondary signal post alongwith timer facilities
  2. Modern police booth containing five cctv IP cameras with the monitor and UPS battery
  3. PA System with 51 poles and speakers
  4. tables chairs and water facilities.
  5. மூன்று வண்ண LED strips சிக்னலில் ஏற்படும் வண்ணத்திற்கு ஏற்ப சமிக்ஞைகள் ஒளிரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது

மேலே குறிப்பிட்டுள்ள சிறப்பு அம்சங்களுடன் போக்குவரத்து மேம்பாட்டு சாதனங்களை உள்ளடக்கிய நவீன போக்குவரத்து தானியங்கி சிக்னல் மற்றும் நவீன காவல் உதவி மையம் அமைக்கப்பட்டு கடந்த ஆறாம் தேதி வெள்ளிக்கிழமையன்று மதுரை காவல் ஆணையர் ஜே. லோகநாதன் ஐபிஎஸ் அவர்கள் இதை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும் அவர் கூறியதாவது, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து நகருக்குள் அதிக வேகமின்றி பயனம் செய்தும் விபத்துக்கள் ஏற்படாவண்ணம் வாகனங்களை இயக்கி விபத்தில்லா மாநகரை உருவாக்க வேண்டுமென்றார்

Leave a Reply

Your email address will not be published.