
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்தியவர்கள் கைது
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் நேற்று 09 .10 .2024 விவசாயக் கல்லூரிக்கு எதிரே அமைந்துள்ள தனியார் மைதானம் அருகே ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் திரு. சிவபாலன் மற்றும் திரு அருண் சிறப்பு ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் வாகன தணிக்கையில் ஈடுபடும்போது சட்டத்திற்கு புறம்பாக சுமார் 50 கிலோ கிராம் அளவுள்ள கஞ்சாவை TN 20 BM 5511 Ford Figo Car என்ற வாகனத்தில் கடத்தி வந்த 1)தனலட்சுமி 56, க/ பெ கலியபெருமாள், எம்ஜிஆர் நகர், அடையாளம் போஸ்ட், திண்டிவனம் தாலுக்கா விழுப்புரம் மாவட்டம் ,2) கண்ணன் 34 ,த/பெ காமாட்சி நல்ஆலம் நெல்லியம்மன் கோவில் தெரு, மரக்காணம் விழுப்புரம் மாவட்டம் 3) கேசவ கிருஷ்ணன் 22, த/பெ மோகன்ராஜ், 12, 2வது தெரு வி.பி நகர் மணாலி விரைவு சாலை, சென்னை ஆகியோர்களை கைது செய்து, மேற்படி நபர்களை விசாரணை செய்ததில் அவர்கள் ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டுற்குள் சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும் அவர்களிடமிருந்து 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
இது தொடர்பாக ஒத்தக்கடை காவல் நிலையத்தில் மேற்படி எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது சிறப்பாக செய்யப்பட்ட காவல் ஆளிநர்களுக்கு உயர்திகாரிகள் தங்களது பாராட்டுகளை தெரிவித்தார்கள்
மேலும் மதுரை மாவட்டத்தில் இதுபோன்று சட்ட விரோதமாக கஞ்சா கடத்தலில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து மொத்தமாக கொள்முதல் செய்து மதுரை மாவட்டத்தில் விற்பனை செய்வதாக தகவல் தெரிய வந்தால் தனிப்படை அமைக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரப்படுகிறது. இனிவரும் காலங்களில் இதுபோன்று வெளி மாநிலங்களிலிருந்து சட்ட விரோதமாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையாக எச்சரித்து உள்ளார்கள்
இதுபோன்று கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் தொடர்பாக தகவல் தெரிவிக்க விரும்புவோர் 94981- 81206 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். அதன் பேரில் தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்வதோடு தகவல் தெரிவிப்போரின் விபரம் ரகசியம் காக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது
