

மதுரை மீனாட்சி நகர் V.M.J.பள்ளியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலிசாரின் போதை தடுப்பு விழிப்புணர்வு
மதுரை போலிஸ் கமிஷ்னர் திரு.லோகனாதன் IPS அவர்களின் உத்தரவின்படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மது விலக்கு அமலாக்க பிரிவு போலிசார் மது போதை தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு தொடர்ந்து அளித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று (14/10/24) மதுரை VMJ பள்ளியில் மாணவர்களுக்கு மது விலக்கு அமலாக்க பிரிவு போலிசாரின் சார்பாக திருமதி.அமுதா சார்பு ஆய்வாளர், மற்றும் முதல் நிலை காவலர் திரு. வெங்கடேஷ்பாபு ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு மது போதை தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு அளித்தனர் இந்த நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.





