பணம் தேவைப்பட்டது; டூவீலருக்கு கள்ளச்சாவி!' -பாண்டிச்சேரி தோழியால் சிக்கிய சென்னைப் பெண்புத்தாண்டையொட்டி தோழி சந்தியாவைச் சந்திக்க சென்னைக்கு வந்தார் மோனிஷா. அப்போது இருவரும் பைக்கைத் திருட முயன்றபோது சந்தியா போலீஸில் சிக்கிக் கொண்டார். சென்னை திருவல்லிக்கேணி, தாயார் சாகிப் தெருவைச் சேர்ந்தவர் யாசர் அராபத் (26). இவர் புத்தாண்டையொட்டி வீட்டிலிருந்து பைக்கில் வெளியில் சென்றார். பின்னர் அவர் இரவில் வீடு திரும்பினார். தெருவில் பைக்கை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றார். இவரின் வீட்டைச் சுற்றி சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இரவு 10 மணியளவில் யாசர் அராபத், சிசிடிவி-யைப் பார்த்தார். அப்போது அவரின் பைக்கின் அருகில் இரண்டு பெண்கள் நின்றுகொண்டிருந்தனர்.அதில் ஒரு பெண், பைக்கை கள்ளச்சாவி போட்டு திறக்க முயற்சி செய்துகொண்டிருந்தார். அதைப்பார்த்த யாசர் அராபத் அதிர்ச்சியடைந்தார். உடனே வீட்டிலிருந்து தெருவுக்கு ஓடிவந்தார். சத்தம் போட்டுக்கொண்டே யாசர் அராபத் வெளியில் வருவதைக் கண்ட இரண்டு பெண்களும் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களைப் பிடிக்க யாசர் அராபத் முயற்சி செய்தார். ஆனால், அந்தப் பெண்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.இதையடுத்து யாசர் அராபத், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் (குற்றப்பிரிவு) புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சீத்தாராம் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். சம்பவ இடத்துக்குச் சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், பைக்கை திருட முயன்ற பெண்கள் குறித்து விசாரித்தனர். விசாரணையில் பைக்கைத் திருட முயன்றது சென்னை ஜாம்பஜாரைச் சேர்ந்த சந்தியா என்கிற அஞ்சுகம் (19) என்றும் அவரின் தோழி மோனிஷா புதுச்சேரியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.பைக்கைத் திருட முயன்ற பெண்களைப் போலீஸார் தேடிவந்த நிலையில் சந்தியா சிக்கினார். அவரிடம் விசாரித்தபோது,
மோனிஷா கூறியதால் பைக்கைத் திருட வந்தேன்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து சந்தியாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதுகுறித்து போலீஸார் கூறுகையில், சந்தியாவும் மோனிஷாவும் தோழிகள். இவர்கள் இருவரும் ஜாம்பஜார் காவல் நிலையம் பகுதியில் பூ வியாபாரம் செய்துவந்துள்ளனர். அப்போது கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டுவந்துள்ளனர். கஞ்சா வழக்கில் மோனிஷாவை போலீஸார் தேடியதும் சென்னையிலிருந்து அவர் புதுச்சேரிக்கு இருப்பிடத்தை மாற்றிவிட்டார். இருப்பினும் சந்தியாவைப் பார்க்க சென்னைக்கு வருவார். பத்தாண்டையொட்டி சென்னைக்கு மோனிஷா வந்தார். அப்போது சந்தியாவை அவர் சந்தித்துப் பேசியுள்ளார். இருவருக்கும் பணத்தேவை ஏற்பட்டுள்ளது. அதனால் பைக்கைத் திருட இருவரும் முடிவு செய்துள்ளனர்.புத்தாண்டை மகிழ்ச்சியாகக் கொண்டாடிய இருவரும் பைக்கைத் திருடுவதற்காக திருவல்லிக்கேணி தாயார் சாகிப் தெரு எல்லீஸ் ரோடு பகுதிக்கு இரவு 10 மணிக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த டூவீலரின் லாக்கைத் திறக்க கள்ளச்சாவிகளைப் பயன்படுத்தியுள்ளனர். அதற்குள் டூவீலரின் உரிமையாளர் யாசர் அராபத் வருவதைக் கவனித்த இருவரும் எஸ்கேப் ஆகினர். மோனிஷா சிக்கினால் இந்த வழக்கில் கூடுதல் தகவல் கிடைக்கும்" எனக் கூறிய போலீஸார்,
சந்தியாவுக்கு அப்பா இல்லை. பூ வியாபாரத்தில் ஈடுபட்டாலும் அவ்வப்போது பைக்குகளைத் திருடி அந்தப் பணத்தைச் செலவு செய்து வந்துள்ளார். சந்தியா மீது இதுவரை எந்தவழக்கும் இல்லை. முதல் தடவையாக அவர் மீது 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம்” என்கின்றனர்.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்