
போக்சோ வழக்கில் சிறப்பான முறையில் புலனாய்வு செய்து தண்டனை பெற்றுத்தந்த காவல் ஆய்வாளருக்கு பாராட்டு
2015ம் ஆண்டு எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சிறப்பான முறையில் புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, போக்சோ வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் எதிரிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.35,000/- அபராதம் என கடுமையான தண்டனை பெற்றுத் தந்த டி.பி சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.நசிமா (அப்போதைய எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர்) அவர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
