Police Department News

மாநில பேரிடர் மீட்பு படை பயிற்சி பெற்ற காவலர்கள் வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்வதற்கு, தயார் நிலையில் இருக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

மாநில பேரிடர் மீட்பு படை பயிற்சி பெற்ற காவலர்கள் வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்வதற்கு, தயார் நிலையில் இருக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளதால், வெள்ளம் மற்றும் புயல் வந்தால் ஆபத்தில் சிக்கியுள்ள பொது மக்களை காப்பாற்றும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, பேரிடர் கால மீட்புக்கு பயன்படுத்தக்கூடிய உபகரணங்களின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என்பதையும், மாநில பேரிடர் மீட்பு படை பயிற்சி பெற்றுள்ள காவலர்கள் தயார் நிலையில் உள்ளனரா என்பதையும் (08.11.2021) மாவட்ட ஆயுதப்படையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் ஆய்வு செய்தார்கள். காற்றடித்து வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் (Inflatable lights) வலுவான தூக்குப் படுக்கைகள் (Fortable stretcher) ஒளிரும் சட்டைகள், பாதுகாப்புச் சட்டை, நைலான் கயிறு, பாதுகாப்பு தலைக்கவசம், மரம் அறுக்கும் இயந்திரம், ஒலிபெருக்கி உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார்கள்.
இந்த ஆய்வின்போது மதுரை மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.விக்னேஸ்வரன் , மதுரை மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திருமதி. நாகதீபா உட்பட காவல்துறையின் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.